அமைச்சரவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்சக் குற்றச்சாட்டு
விபரங்கள்
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாண வேலைத்திட்டமொன்றில் ஈடுபட்டுள்ள ஜப்பானின் TaiSei நிறுவனத்திடம் 200 மில்லியன் ரூபாய் நிதி கோரியுள்ளதாக 2022 ஜூலை மாத ஆரம்பத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குற்றஞ் சாட்டினார். அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா மற்றும் TaiSei நிறுவனம் ஆகிய இரு தரப்பும் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர்[17].
பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக, அவர் குற்றவாளி இல்லை என நிரூபிக்கப்பட்டு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது [18].
இந்த விடயங்கள் சம்பந்தமான நிதிப் பெறுமதி
200 மில்லியன் ரூபாய்
இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
2022 ஜூலை ஆரம்பத்தில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதுடன், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தனது அமைச்சர் பதவியிலிருந்து தற்காலிகமாக இராஜினாமா செய்தார் [19].
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் நபரொருவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது [20].
2022 ஜூலை இறுதியில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த விடயத்தை விசாரணை செய்வதற்கு மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது [21] [22].
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TISL நிறுவனத்தினால் இரண்டு விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
.
- பின்வரும் தகவல்களைக் கோரி துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது
- 05.20- 2022.07.31 காலப்பகுதியில் அமைச்சுக்கும் TaiSei நிறுவனத்திற்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களினதும் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்.
- 01.01 – 2022.07.31 இடையே (திட்டப் பயனாளியாக Taisei நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட காலம்) நடைபெற்ற அனைத்து கொள்முதல் குழுக் கூட்டங்களின் அறிக்கைகளினதும் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்.
- 07.22 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழுவின் அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
அதற்குப் பதில் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்வதில்லை என TISL முடிவு செய்தது.
- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 07.2022 அன்று நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழுவின் அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியைக் கோரி ஜனாதிபதி செயலகத்திலும் தகவல் விண்ணப்பம் ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் இந்த அறிக்கை 2023 இல் TISL க்கு வழங்கப்பட்டது.
வேறு என்ன செய்ய முடியும்?
பாரிய அளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்கள் பற்றிய தகவல்களை பொது மக்களுக்கு அணுகக்கூடிய திறந்த வெளியில் வைக்க வேண்டும் என ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் பிரஜைகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்தல்.
[17] https://www.ft.lk/front-page/Japanese-Taisei-Corp-denies-bribery-allegations-over-BIA-expansion-project/44-737746
[18] http://www.adaderana.lk/news/83821/president-appoints-committee-to-probe-bribery-allegations-against-nimal-siripala
[19] https://www.newswire.lk/2022/07/06/bribery-allegation-president-orders-inquiry-against-minister-nimal-siripala/
[20] https://island.lk/bribery-claims-involving-japanese-contractor-lawyer-asks-govt-to-come-clean-over-allegations-levelled-against-nimal-siripala/
[21] https://www.presidentsoffice.gov.lk/index.php/2022/07/23/president-appoints-a-three-member-committee-on-a-request-made-by-former-minister-nimal-siripala-de-silva/