கருத்துக்களை வெளியிடும் உரிமையை மீறல் – எதிர்ப்பாளர்களை அடக்குதல்

விபரங்கள்

மக்கள் எழுச்சிக்கு பதிலளிக்கும் வகையில், 2022 இல் இலங்கை அரசாங்கம், எதிர்ப்புக்களைக் கலைக்க பொலிஸுக்கும் இராணுவத்திற்கும் அதிக அதிகாரங்களை, அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் மூலம் வழங்கியது. இந்த அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை பயன்படுத்தி மேற்கொண்ட அரச அனுசரணையுடன் கூடிய அடக்குமுறை மூலம் மார்ச் முதல் ஜூலை வரை அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தல், பலவீனமான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் நிர்வாகம், மற்றும் பரந்த ஊழல் என்பவற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடந்தன.

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா மற்றும் நாட்டின் பேரழிவிற்கு பொறுப்பானவர்களின் பொறுப்புக்கூறல் என்பவற்றைக் கோரி பிரஜைகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) மனிதாபிமானமற்ற ஏற்பாடுகளை திருத்துமாறு சிவில் சமூகம் மற்றும் சட்ட வல்லுநர்கள் வலுவான அழுத்தம் கொடுத்த போதிலும் [23] அந்த சட்டத்தின் கீழ் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர் [24].

இலங்கை அரசாங்கமும் ஒரு தரப்பினராக உள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி மனித சுதந்திரம் மற்றும் உரிமைகளை கட்டுப்படுத்தும் அத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது.

அமைதியாக ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமைகளைப் பாதுகாப்பது போன்றே, அவற்றின் செயற்பாட்டை ஊக்குவித்தல், அவற்றுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரசு கடமைப்பட்டுள்ளது.

எனினும், அமைதியாக ஒன்று கூடும் மற்றும் கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாப்பதற்கு அதிகாரத்திலுள்ளவர்களுக்கு முடியாமல் போனது மாத்திரமல்லாமல், பொலிஸ் மற்றும் இராணுவ அடக்குமுறையினால் பல உயிர் சேதங்களும் இடம்பெற்றன [25]. நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவது மற்றும் ‘பொலிஸ் ஊரடங்குச் சட்டம்’ விதிப்பதன் மூலம் ஆர்ப்பாட்டங்களை சட்ட ரீதியாக முடக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன [26].

முன்னாள் ஜனாதிபதியின் இராஜினாமாவை அடுத்து அதிகாரத்துக்கு வந்த அரசாங்கத்தினால் ஆர்ப்பாட்டங்களை முடக்குவது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரான வசந்த முதலிகே மற்றும் ஏனைய இருவர் 2022 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது களனி வலய குற்றவியல் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.

பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் அவர்களுக்கு எதிராக 90 நாட்கள் தடுப்பு வைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்[27].

 

இங்குள்ள ஊழல் நடவடிக்கைகள் யாது?

அதிகாரத் துஷ்பிரயோகம்

பயங்கரவாதத் தடுப்பு சட்டம் போன்ற சட்டங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படல்

அரச ஊடகங்கள் பக்கச்சார்பற்ற விதத்தில் அறிக்கையிடல்

 

இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?  

பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து பல தரப்பினர் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நாட்டின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக குரல் எழுப்புவதற்காக அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பிரஜைகளை கைது செய்தல் மற்றும்  அடக்குவதைக் கண்டித்து TISL ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டது[28].

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னணியில் உள்ள குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியது. இந்த வன்முறைச் செயல்களை விசாரணை செய்யத் தவறிய பொலிஸாருக்கு எதிராக விசாரணை வேண்டும் என அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்தது[29].

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக சட்டத்தரணி ரிவிஹார பின்னதூவவினால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மற்றும் வணக்கத்திற்குரிய கல்வெவ சிறிதம்ம தேரருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்பு வைப்பு உத்தரவை நீடிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு குறிப்பொன்றை அனுப்பியது[30].

 

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து Human Rights Watch, Amnesty International, World Organisation Against Torture மற்றும் International Service for Human Rights போன்ற சில உலகளாவிய அமைப்புகளினால் அறிக்கைகள் மற்றும் ஒன்றிணைந்த வெளியீடுகள் வெளியிடப்பட்டன[31].

தாம் முகங் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் குரலெழுப்பும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதற்கு இலங்கை ஆட்சியாளர்கள் 2022 ஏப்ரல் மாதம் முதல் தேவைக்கு அப்பால் அவசரகால சட்டத்தை பயன்படுத்துவதை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்கள் 2022 ஆகஸ்ட் மாதத்தில் கண்டித்தனர்[32].

 

பாதிக்கப்பட்டவர்கள் யார்?

இலங்கைப் பிரஜைகள்

வேறு என்ன செய்ய முடியும்?

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்துதல் போன்ற அத்தியாவசிய சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பில் முன்னிற்பதற்கு பிரஜைகள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகங்களுக்கு முடியும் [33].

சட்டம், எதேச்சாதிகாரமாகத் தடுத்து வைத்தல், மேலதிகாரிகளின் சட்டரீதியான உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றுதல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற விடயங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உரிய அறிவு மற்றும் பயிற்சி வழங்குதல்

ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் காயங்களுக்கு உள்ளானவர்கள் சார்பில் அரசங்கத்தின் நட்டஈடு கோருதல்.

 

 

[23] https://www.newsfirst.lk/2022/08/22/sri-lanka-protesters-must-not-be-detained-under-the-draconian-anti-terror-law-says-amnesty/

https://www.newsfirst.lk/2022/09/10/stop-arresting-peaceful-activists-under-imaginary-charges-medical-professionals/

[24] https://www.newsfirst.lk/2022/08/19/sri-lanka-student-activists-detained-for-72-hours-police-want-to-use-terrorism-act-for-3-month-detention/

[25] https://www.amnesty.org/en/latest/news/2022/07/sri-lanka-shameful-brutal-assault-on-peaceful-protestors-must-immediately-stop/ and https://www.fidh.org/en/region/asia/sri-lanka/sri-lanka-brutal-attack-against-peaceful-protesters-by-security

[26] http://www.colombopage.com/archive_22B/Jul08_1657300329CH.php

[27] https://www.themorning.lk/articles/216384

[28] https://www.tisrilanka.org/statement-on-ongoing-suppression-of-civic-activism/

[29] https://economynext.com/sri-lanka-bar-association-calls-for-end-to-violence-immediate-arrest-of-instigators-94071/ 

[30] https://www.hrcsl.lk/wp-content/uploads/2022/10/HRCSL-Press-Notice-on-26-10-2022-ii.pdf

[31] https://www.hrw.org/news/2022/08/05/sri-lanka-end-government-crackdown-peaceful-protesters 

[32]  https://www.ohchr.org/en/press-releases/2022/08/sri-lanka-un-human-rights-experts-condemn-repeated-use-emergency-measures 

[33] https://www.cpalanka.org/commentary-on-prevention-of-terrorism-temporary-provisions-amendment-bill-2022/

 

 

This website uses cookies to improve your web experience.