கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்

விளக்கம்:

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது 2021 ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலமானது கொழும்புத் துறைமுக நகரம் செயற்படும் விதம் தொடர்பிலான சட்ட கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, ஆகவே இது சட்ட கட்டமைப்பில் ஓர் முக்கிய பகுதியாகும். முன்மொழியப்பட்ட சட்டமூலமானது ஓர் சிறிய கண்காணிப்பினை அடிப்படையாக கொண்ட நிதி மையத்தினை அமைத்து கடல்கடந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை அதில் பதிவு செய்துகொள்ளுமாறு அழைப்புவிடுப்பதை கரிசனை கொள்கிறது. “துறைமுக நகர சட்டமூலத்தில் போதிய பாதுகாப்புகள் இல்லை”. [i]

அவசரமாக இச்சட்டம் கொண்டு வரப்பட்ட விதமானது இலங்கை வாழ் மக்களின் தகவலறியும் உரிமைக்கு எதிரானதாகும். முன்மொழியப்பட்ட சட்டமூலமானது இலங்கை வர்த்தமானியில் முன்கூட்டியே வெளியிடப்படவுமில்லை அத்துடன் பொது மக்களின் ஆலோசனை மற்றும் மதிப்பாய்வுக்கான வாய்ப்பும் வழங்கப்படவுமில்லை. உயர் நீதிமன்ற நிர்ணயம் அறிவிக்கப்பட்ட பிறகும், நாட்டில் கோவிட் தாக்கத்தின் அலையானது தீவிரமாக காணப்பட்ட போதிலும் கூட குறித்த சட்டமூலமானது 2 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டது. இச்செயற்பாடானது குறித்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்து புரிந்து கொள்வதற்கும், தகவலறிந்து முடிவுகளை எட்டவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதுமான கால அவகாசத்தினை வழங்கியிருக்கவில்லை.[ii]

சாத்தியமான ஊழல் அபாயங்கள்: 

  • கடல்கடந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஸ்தாபித்தல் மற்றும் அவற்றை முறையாக மேற்பார்வை செய்யாமை என்பவற்றினால் துறைமுக நகரமானது பண தூய்தாக்கல் மற்றும் சட்டவிரோத நிதி பாய்ச்சல்கள்/நடவடிக்கைகளை ஈர்க்க வழிவகுக்கும்.
  • நிறுவன உரிமையாளர்கள் தொடர்பான தகவல்களை பொது மக்கள் அணுகுவதற்காக வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் துறைமுக நகரமானது ஓர் இரகசிய அதிகார வரம்பாக மாறி குற்றங்களினால் பெறப்படும் வருமானங்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்க வழிவகுக்கும்.

நிதியியல் நடவடிக்கைச் செயலணியானது (FATF) பண தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாத நிதியுதவியின் பாதிப்பின் அடிப்படையில் நாடுகளை மதிப்பிட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தின் ஊடாக நடைபெறும் நிதி நடவடிக்கைகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் FATF னால் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டில் இலங்கையானது தரமிறக்கப்படும் அபாயத்தினை எதிர்கொள்ளும், ஆகவே இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைக்க வழிவகுக்கும். [iii]

இதுவரை நடந்த விடயங்கள் என்ன?

  • முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டு TISL நிறுவனம் உட்பட 19 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட சில திருத்தங்களை இணைத்தே குறித்த சட்டமூலமானது 2021 மே மாதம் 20 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.

எவ்வாறாயினும், கொழும்புத் துறைமுக நகரில் இடம்பெற சாத்தியமான ஊழல் அபாயங்கள் தொடர்பில் TISL நிறுவனமானது புதிய சட்டம் குறித்து கூடிய கரிசனை கொண்டுள்ளது. [iv]

என்ன செய்ய முடியும்?

  • மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் (FIU) மேற்பார்வை உட்பட கொழும்புத் துறைமுக நகரில் செயற்படும் கடல்கடந்த நிறுவனங்கள் உள் வருவதையும் வெளியேறுவதையும் முறையாக கண்காணிக்கப்படுவதை உறுதி செய்ய நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் (FATF) இன் வழிகாட்டல்களுடன் சட்ட மற்றும் நடைமுறை செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.
  • கொழும்பு துறைமுக நகர நிறுவங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விடயங்கள் வெளிப்படையாக பேணப்படல் வேண்டும்.

 

[i] https://www.youtube.com/watch?v=7JfPskT_rYs

[ii] https://www.tisrilanka.org/serious-concerns-linger-about-new-colombo-port-city-law/

[iii] https://www.tisrilanka.org/serious-concerns-linger-about-new-colombo-port-city-law/

[iv] https://www.tisrilanka.org/three-key-corruptions-concerns-regarding-the-colombo-port-city-economic-commission-bill/