நிலக்கரி
விபரங்கள்
நிலக்கரி கொள்வனவு செய்வதற்காக பதிவு செய்யப்படாத “Black Sand Commodities” நிறுவனத்திற்கு டெண்டரை வழங்குவதில் சட்டரீதியான கொள்முதல் நடைமுறை பின்பற்றப்படவில்லை என இலங்கை கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலக்கரி 2022-2025 காலப்பகுதியில் நுரைச்சோலை லக் விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு பயன்படுத்தப்பட இருந்தது. கணக்காய்வாளர் நாயகத்துக்கு அமைய, கொள்முதல் செய்வதில் ஆர்வமுள்ள ஏனைய தரப்பினருக்கு நியாயமான மற்றும் சமமான வாய்ப்புகளைத் தவிர்க்கும் நோக்கத்தில், இங்கு சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதாகும். பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனை பாராளுமன்றத்தில் தெரிவித்தார் [37].
இந்த விடயங்கள் சம்பந்தமான நிதிப் பெறுமதி
1,477 மில்லியன் அமெரிக்க டொலர் [38]
இங்குள்ள ஊழல் நடவடிக்கைகள் யாது?
- பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல்
- முறையான கொள்முதல் செயல்முறையை பின்பற்றாமை
இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
நிலக்கரி கொள்முதல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் குறைந்தபட்சம் ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) பரிந்துரைத்தது [39].
இந்தக் கொள்முதல் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயல்படுத்துமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) ஆலோசனை வழங்கியது [40].
வேறு என்ன செய்ய முடியும்?
உடனடிக் கொள்முதல் மற்றும் விலைமனு கோரப்படாத முன்மொழிவுகளின் (unsolicited proposals) அடிப்படையிலான கொள்முதல் செயல்பாட்டிலுள்ள ஊழல் அபாயத்தைத் தவிர்க்க, கொள்முதல் நடைமுறையை ஒழுங்குபடுத்துமாறு பிரஜைகளுக்கு, சிவில் சமூகத்தினருக்கு, ஊடகங்களுக்கு மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு குரல் எழுப்ப முடியும்.
[37] https://www.themorning.lk/articles/221310
[38] https://twitter.com/harshadesilvamp/status/1563133345395265544?lang=en
[39] https://economynext.com/coal-procurement-sri-lankas-copf-recommends-action-against-officials-100712/
[40] https://www.parliament.lk/en/committee-news/view/2869?category=33