பண்டோரா பேப்பர்ஸ்

விளக்கம்:

சமீபத்தில், சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) [i] நிருபமா ராஜபக்ச (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு முன்னாள் பிரதி அமைச்சர்), அவரது கணவர் திருக்குமார் நடேசன்[ii] மற்றும் இராமலிங்கம் பாஸ்கரலிங்கம் (முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஆலோசகரும் 2015 தொடக்கம் 2019 வரையான நல்லாட்சி நிர்வாக காலப்பகுதியினுள் பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை குழுவின் அங்கத்தவரும் ஆவர்) உட்பட இலங்கை பிரஜைகள் மூவரின் இரகசிய பரிவர்த்தனைகளை வெளிப்படுத்தியது. [iii]

பண்டோரா பேப்பர்ஸ் ஆனது மேலே குறிப்பிட்ட தனிநபர்களின் கடல்கடந்த நிறுவனங்களில் காணப்படும் விரிவான சொத்துக்கள் மற்றும் செல்வங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தியது.

இதில் இடம்பெற்றுள்ள ஊழல் என்ன?

விபரிக்கப்படாத சொத்துக்களின் கையகப்படுத்தலுக்கான சாத்தியம், பொது வளங்களின் தவறாக பயன்படுத்தலுக்கான சாத்தியம், அந்நிய செலாவணி சட்டத்தின் சாத்தியமான மீறல், சாத்தியமான வரி ஏய்ப்பு மற்றும் சாத்தியமான பண தூய்த்தாக்கல்.

இதுவரை நடந்த விடயங்கள் என்ன?

 • பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஓர் விசாரணையினை ஆரம்பிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தார்.[iv]
 • முறையான விசாரணைகளை முன்னெடுக்கக்கோரி ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பல சிவில் சமூக அமைப்புக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டது.
 • ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா:
 • இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது. [v] [vi]
 • நிருபமா ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து பிரகடனங்களை கோரி தகவலறியும் உரிமைக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்தது.
 • பண தூய்தாக்கலுக்கான சாத்தியகூறுகள் தொடர்பில் உடனடியாக விசாரணையினை மேற்கொள்ளுமாறு நிதி புலனாய்வுப் பிரிவுக்கு (FIU) ஓர் கடிதத்தினை எழுதியது.
 • கடல் கடந்த நிதிசார் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் விவரிக்கப்படாத சொத்துக்கள் வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சர்வதேச ஒத்துழைப்பை நாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஓர் ஊடக அறிக்கையினை வெளியிட்டது. [vii]
 • 1975 ஆம் ஆண்டின் (திருத்தப்பட்ட) சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, நிருபமா ராஜபக்சவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை கோரி ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதங்கள் எழுதப்பட்டன.

 என்ன செய்ய முடியும்?

 • பொது நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது பண தூய்தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் CIABOC மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் உரிய விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துதல்.
 • விசாரணையூடாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்.
 • பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக அடையாளபடுத்திய திருடப்பட்ட அல்லது இழக்கப்பட்ட நாட்டின் வளங்களை இராஜதந்திர வழிகளூடாகவும் விசாரணைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் ஊடாகவும் மீள பெற்றுக்கொள்வதற்கு உரிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு சட்டரீதியான உதவிகளை வழங்குதல்.

_______________________________

Update

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முறைப்பாடுகளும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. (முறைப்பாட்டு இல BC/1676/2021 மற்றும் BC/0073/2021). BC/1676/2021 எனும் முறைப்பாட்டுக்கு அமைவாக, TISL நிறுவனத்திடமிருந்து 2022 ஜூன் மாதம் 06 ஆம் திகதி ஓர் அறிக்கையும் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டது.

பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் தற்போதைய நிலை தொடர்பில் அறியத்தருமாறும் குறித்த விசாரணைகளுக்கான தீர்வுகளை துரிதப்படுத்துமாறும் கோரி TISL நிறுவனமானது 2022 ஜூலை மாதம் 19 ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலமாக கோரிக்கையொன்றினை விடுத்தது.

______________________________________

[i] https://www.icij.org/

[ii] https://www.icij.org/investigations/pandora-papers/sri-lanka-rajapaksa-family-offshore-wealth-power/

[iii] https://www.sundaytimes.lk/211031/news/460407-460407.html

[iv] https://www.themorning.lk/president-orders-probe-into-pandora-duo/

[v] https://www.tisrilanka.org/tisl-calls-on-ciaboc-to-investigate-assets-of-r-paskaralingam/

[vi] https://www.tisrilanka.org/tisl-files-complaint-with-ciaboc-on-pandora-papers-revelations/

[vii] https://www.tisrilanka.org/sri-lankan-law-enforcement-agencies-have-an-opportunity-to-reveal-the-truth-about-pandora-papers/