மசகெண்ணெய்

விபரங்கள்

இலங்கைக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதில் பல மில்லியன் டொலர் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர 2022 ஆகஸ்ட் மாதத்தில் குற்றம் சுமத்தினார்[[34].

கொள்முதல் நடைமுறைகளை மீறி எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக “Coral Energy PLC” எனும் புதிதாக நிறுவப்பட்ட (உண்மையான உரிமை பற்றிய தகவல் இல்லாத) நிறுவனத்தை அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் குறிப்பிடுவதற்கு அமைய, Coral Energy PLC ஆனது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் (CPC) ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்து சுமார் 100,000 மெட்ரிக் டொன் Ural மசகெண்ணெய் இறக்குமதி செய்துள்ளதுடன், Ural ஐ விட அதிகமான விலையுடைய Brent இன் விலையை ஆவணப்படுத்தி அதிக கட்டணம் அறவிட்டுள்ளது. இறுதியில் இலங்கையர்களுக்கு தரம் குறைந்த மசகெண்ணெய்யை அதிக விலைக்கு வழங்க வேண்டியேற்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட Ural எண்ணெய்யின் உண்மை விலை (99,673 மெட்ரிக் டொன்னிற்கு) 51.027 மில்லியன் அமெரிக்க டொலர் எனினும், இலங்கை Brent இன் விலையான 82.209 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தியுள்ளது.

வேறுபாடு (நட்டம்) 30.938 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

 

இங்குள்ள ஊழல் நடவடிக்கைகள் யாது?

  • கொள்முதல் நடைமுறைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள்
  • எண்ணெய் இறக்குமதியில் ஏகபோகம் இருப்பது
  • அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து வெளிப்படைத்தன்மை புலப்படாமை
  • அரச நிறுவனங்களில் நிலவும் செல்வாக்குகளை முகாமைத்துவம் செய்ய முறையான பொறிமுறை இல்லாமை

 

இந்த விடயங்கள் சம்பந்தமான நிதிப் பெறுமதி

 30.938 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம்

 

இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

 பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மசகெண்ணெய் கொள்முதல் செயல்முறையில் உள்ள சிக்கல்களை முன்னிலைப்படுத்தியது [35]. பாராளுமன்ற விவாதங்களின் போது இந்த பிரச்சினை எழுப்பப்பட்டதுடன்,  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது [36].

 

வேறு என்ன செய்ய முடியும்?

 உடனடிக் கொள்முதல் மற்றும் விலைமனு கோரப்படாத முன்மொழிவுகளின் (unsolicited proposals) அடிப்படையிலான கொள்முதல் செயல்பாட்டிலுள்ள ஊழல் அபாயத்தைத் தவிர்க்க, கொள்முதல் நடைமுறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் முன்னிற்பதற்கு பிரஜைகளுக்கு, சிவில் சமூகத்தினருக்கு, ஊடகங்களுக்கு மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு முடியும்.

 

[34] https://www.dailymirror.lk/front_page/Dayasiri-questions-crude-oil-deal/238-246335

[35] https://www.themorning.lk/articles/215249

[36] http://www.adaderana.lk/news/85395/cpc-denies-dayasiris-claims-on-misappropriations-in-fuel-imports

 

 

This website uses cookies to improve your web experience.