2021 Tamil

மீளப் பெறப்பட்ட / நீக்கப்பட்ட ஊழல் வழக்குகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொழிநுட்ப பிழைகள் காரணமாக மீளப் பெறப்பட்ட வழக்குகள். இல யாருக்கு எதிராக குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டது   மீளப் பெறக் காரணம்   01 துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன [i] 2010 மார்ச் 31 தொடக்கம் 2014 மே 31 வரையிலான காலப்பகுதியில் அமைச்சராக பணியாற்றிய போது 41.2 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் சட்ட விரோதமாக பெறப்பட்டமை […]Read More

2021 Tamil

உர பிரச்சினை

இழப்பு சீனாவின் விநியோக நிறுவனத்திற்கான இழப்பீட்டுத் தொகை 6.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 1.4 பில்லியன் ரூபா), இந்திய நிறுவனத்திடமிருந்து நனோ நைதரசன் திரவ உரத்தினை கொள்வனவு செய்வதற்கு சுமார் 29.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 509 மில்லியன் ரூபா), இது சந்தை விலையினை விட அதிகமாகும். விளக்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் உர இறக்குமதியினை முற்றாக தடை செய்ய முன்மொழிந்தார். அதன் மாற்றீடாக இயற்கை பசளையின் […]Read More

2021 Tamil

பண்டோரா பேப்பர்ஸ்

விளக்கம்: சமீபத்தில், சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) [i] நிருபமா ராஜபக்ச (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு முன்னாள் பிரதி அமைச்சர்), அவரது கணவர் திருக்குமார் நடேசன்[ii] மற்றும் இராமலிங்கம் பாஸ்கரலிங்கம் (முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஆலோசகரும் 2015 தொடக்கம் 2019 வரையான நல்லாட்சி நிர்வாக காலப்பகுதியினுள் பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை குழுவின் அங்கத்தவரும் ஆவர்) உட்பட இலங்கை பிரஜைகள் மூவரின் இரகசிய பரிவர்த்தனைகளை வெளிப்படுத்தியது. [iii] பண்டோரா […]Read More

2021 Tamil

வெள்ளைப் பூண்டு ஊழல்

இழப்பு எவ்வளவு: ஊடக அறிக்கைகளின் படி 17.9 மில்லியனுக்கு மேல் [i] விளக்கம்: சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 56,000 கிலோவிற்கு அதிகமான பூண்டுகளை கொண்ட இரண்டு கொள்கலன்கள் இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆதரவுடன் சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் குழு ஒன்றினால் துறைமுகத்திலிருந்து நேரடியாக தனியார் நிறுவனமொன்றுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக சதொச நிறுவன ஊழியர் ஒருவர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு (CAA) வழங்கிய தகவலைகளைத் தொடர்ந்து இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.[ii] சதொச நிறுவனத்தின் பல […]Read More

2021 Tamil

தரவு மோசடி – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுத்தளத்தை மீறுதல்

விளக்கம்: கோவிட் – 19 பரவல் காரணமாக இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவிட் – 19 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குதல் தொடக்கம் ஏராளமான காரணங்களுக்காக சர்ச்சைக்குரிய வகையில் விவாதிக்கப்பட்ட முக்கிய நிறுவனங்களில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையும் (NMRA) ஒன்றாகும். இருப்பினும், NMRA யின் தரவுத்தளமானது அத்துமீறப்பட்டு “மருந்துக்களின் உருவாக்கம் மற்றும் ஏனைய இரகசிய ஆவணங்கள்” தொடர்பில் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக 2021 ஆகஸ்ட் மாதம் தெரிவிக்கப்பட்டது. சுமார் 2TB தரவுகள் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. [i] இந்த […]Read More

2021 Tamil

2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க நிதிச் சட்டம்

விளக்கம்: 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஓர் நிதி (திருத்தப்பட்ட) மசோதாவானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, இம்மசோதாவானது வெளிநாட்டில் வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு வரி விலக்களிக்க முயல்கிறது. அதாவது எந்தவித கேள்விகளும் கேட்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியுடன் அவர்கள் தானாக முன்வந்து அவர்களின் வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை வெளிப்படுத்தினால் அத்தகைய சொத்துக்களுக்கு 1% வரி விகிதத்தில் நாட்டிற்கு கொண்டு வர முடியும். கோவிட் – 19 தொற்றுப்பரவல் காரணாமாக மோசமான பொருளாதாரத்தின் பின்னணி மற்றும் பண தூய்தாக்கல் குறித்த […]Read More

2021 Tamil

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு – துமிந்த சில்வா

விளக்கம்: 2011 ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவரைக் கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவுக்கும் மேலும் நால்வருக்கும் 2016 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. [i] இதில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடி என்ன? அரசியல் ரீதியில் தொடர்புடைய நபரை மன்னிக்க நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்துதல். இந்த சம்பவத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான முறையான நடைமுறை பின்பற்றப்பட்டதா என […]Read More

2021 Tamil

அரசியல் ரீதியிலான தாக்கங்கள்/ பாதிப்புக்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

விளக்கம்: 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பதவி வகித்த அரச அதிகாரிகள், அரச கூட்டுத்தாபன ஊழியர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பொலீஸ் அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் செயல்கள் குறித்து ஆராய அதிவிசேட வர்த்தமானி ஊடாக மூன்று அங்கத்தவர்கள் அடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றினை ஜனாதிபதி நியமித்தார். ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்பட வேண்டிய காலம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தொடக்கம் […]Read More

2021 Tamil

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்

விளக்கம்: கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது 2021 ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலமானது கொழும்புத் துறைமுக நகரம் செயற்படும் விதம் தொடர்பிலான சட்ட கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, ஆகவே இது சட்ட கட்டமைப்பில் ஓர் முக்கிய பகுதியாகும். முன்மொழியப்பட்ட சட்டமூலமானது ஓர் சிறிய கண்காணிப்பினை அடிப்படையாக கொண்ட நிதி மையத்தினை அமைத்து கடல்கடந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை அதில் பதிவு செய்துகொள்ளுமாறு அழைப்புவிடுப்பதை கரிசனை கொள்கிறது. […]Read More

2021 Tamil

சீனி இறக்குமதியின் ஊழல்

இழப்பு எவ்வளவு: 15.9 பில்லியன் ரூபா [i] விளக்கம்: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக அரசாங்கம் 2020 மே மாதம் சீனியின் இறக்குமதிக்கான விசேட வியாபார பண்ட அறவீட்டினை கிலோ ஒன்றிக்கு 35 ரூபாயிலிருந்து 50 ரூபாவுக்கு உயர்த்தியது. பின்னர் 2020 அக்டோபர் மாதம் 14 ஆம் திகதியன்று ஒரு கிலோ சீனிக்கான வரியானது 50 ரூபாயிலிருந்து 25 சதத்திற்கு (0.25) குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீனிக்கான சில்லறை விலையினை குறைக்க முடியாது […]Read More