ஜனாதிபதியின் பொது மன்னிப்பு – துமிந்த சில்வா

விளக்கம்:

2011 ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவரைக் கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவுக்கும் மேலும் நால்வருக்கும் 2016 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. [i]

இதில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடி என்ன?

அரசியல் ரீதியில் தொடர்புடைய நபரை மன்னிக்க நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்துதல்.

இந்த சம்பவத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான முறையான நடைமுறை பின்பற்றப்பட்டதா என பல்வேறு தரப்பினர்களும் தமது கவனத்தினை செலுத்தினர். அரசியலமைப்புச் சட்டத்தின் 34 (1) பிரிவின் படி, குறித்த வழக்கை விசாரித்த நீதிபதியின் அறிக்கையினை ஜனாதிபதி பெற வேண்டும். மேலும் சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகிய இருவரினதும் பரிந்துரைகள் உள்ளடங்கிய இறுதி அறிக்கையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் குறித்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பில் போதுமான வெளிப்படைத்தன்மை இல்லை.

இதுவரை நடந்த விடயங்கள் என்ன?

  • படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் மகளான ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
  • பொது மன்னிப்புக்கான காரணங்களைக் கேட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.
  • அதேபோல் TISL நிறுவனமும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு முறைமையின் பொறுப்புக்கூறல் தன்மையினைக் கோரி ஓர் அறிக்கையினை வெளியிட்டது. மேலும் ஜனாதிபதி செயலகத்தில் பின்வரும் விடயங்களுக்கு பதில்களை எதிர்பார்த்து ஓர் தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பம் ஒன்றினையும் தாக்கல் செய்தது.
  • விசாரணை மேற்கொண்ட நீதிபதியின் அறிக்கையின் பிரதி.
  • சட்டமா அதிபரின் ஆலோசனை அடங்கிய ஆவணங்களின் பிரதி.
  • நீதி அமைச்சரின் பரிந்துரை அடங்கிய ஆவணங்களின் பிரதி.
  • முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை .

கோரிக்கையானது தற்போது ஆணைக்குழுவில் மேல்முறையீட்டு மட்டத்தில் காணப்படுகிறது. [ii]

என்ன செய்ய முடியும்?

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் முறையில் தேவையான சீர்திருத்தங்களுக்கான கோரிக்கையினை முன்வைத்தல். [iii]

 

[i] https://economynext.com/former-sri-lanka-mp-and-murder-convinct-duminda-silva-out-on-presidential-pardon-83320/

[ii] https://www.tisrilanka.org/tisl-concerned-by-use-of-executive-powers-to-pardon-a-political-ally/

[iii] https://www.tisrilanka.org/tisl-submits-proposals-to-expert-committee-on-new-constitution/