உர பிரச்சினை

இழப்பு

சீனாவின் விநியோக நிறுவனத்திற்கான இழப்பீட்டுத் தொகை 6.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 1.4 பில்லியன் ரூபா), இந்திய நிறுவனத்திடமிருந்து நனோ நைதரசன் திரவ உரத்தினை கொள்வனவு செய்வதற்கு சுமார் 29.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 509 மில்லியன் ரூபா), இது சந்தை விலையினை விட அதிகமாகும்.

விளக்கம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் உர இறக்குமதியினை முற்றாக தடை செய்ய முன்மொழிந்தார். அதன் மாற்றீடாக இயற்கை பசளையின் உற்பத்தியினை அதிகரிக்க முன்மொழியப்பட்டது. [i]

எவ்வாறாயினும், உள்நாட்டு பாவனைக்காக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து இயற்கை பசளையினை இலங்கை அரசாங்கம் இறக்குமதி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவினை அடிப்படையாக கொண்ட Qingdao Seawin Biotech Group Co., Ltd எனும் நிறுவனத்தினூடாக இறக்குமதி செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் டன் இயற்கை பசளைகளில் தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்கள் மாதிரி பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அதிகார சபைகளினால் குறித்த பசளைகள் திருப்பி அனுப்பியதாக அறிவிக்கப்பட்டது.[ii] இந்த முன்னேற்றகரமான செயற்பாடுகளைத் தொடர்ந்து வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனியானது குறித்த விநியோக நிறுவனத்திற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதை தடுப்பதற்காக கொழும்பு உயர் நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொண்டது.[iii] தேசிய தாவர தடுப்புக் காப்புச் சேவை (NPQS) இன் அலட்சியத்தினால் ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதத்திற்கான இழப்பீட்டினை கோரி குறித்த விநியோக நிறுவனத்திடமிருந்து நவம்பர் மாத தொடக்கத்தில் கடிதமொன்றின் ஊடாக NPQS இற்கு பதிலளிக்கப்பட்டது. குறித்த விநியோக நிறுவனம் 3 நாட்களுக்குள் 8 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 1.6 பில்லியன் ரூபா) இழப்பீடாக செலுத்துமாறு கோரியது.[iv]

தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்கள் காரணமாக இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட 20,000 டன் உர கொள்வனவுக்கு இலங்கையானது 6.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 1.4 பில்லியன் ரூபா) Qingdao Seawin Bio-tech Group எனும் நிறுவனத்திற்கு (சரக்கு கப்பலின் செலவில் 75%) செலுத்த வேண்டும் என 2021 நவம்பர் மாதம் 24 ஆம் திகதியன்று கமத்தொழில் அமைச்சரான மஹிந்தானந்த அழுத்தகமே குறிப்பிட்டார். அதேபோல் குறித்த நிறுவனத்திடமிருந்து புதிய இருப்புக்களை கொள்வனவு செய்வதற்கும் இலங்கை இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. [v]

இதற்கிடையில், விவசாய திணைக்களமானது குஜராத் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து சுமார் 2 மில்லியன் லிட்டர் நனோ நைதரசன் திரவ உரத்தினை 500ml 12.45 அமெரிக்க டாலர்கள் என்றடிப்படையில் ஆர்டர் செய்துள்ளது. ஆனால் இந்தியாவில் குறித்த நனோ நைதரசன் திரவ உரத்தினை சந்தை மதிப்பானது சுமார் 3.23 அமெரிக்க டாலர்கள் என குறிப்பிட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் கேள்வி எழுப்பினர்.[vi]

மேலும், உர இறக்குமதியின் போது மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள் உரிய நடைமுறைகளை பின்பற்றுவதை தவிர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனியினால் பராமரிக்கப்படும் கணக்குகள் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்வதே உரிய படிமுறையாகும். ஆனால், “யுனைடெட் பார்மர்ஸ் ட்ரஸ்ட் லிமிடட் (United Farmers Trust Limited) என்ற பெயரில் புதிய தனியார் கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டு 1.275 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்துமாறு திறைசேரி நேரடியாக மக்கள் வங்கிக்கு உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.[vii]

டிசம்பர் மாதம் 6ஆம் திகதியன்று சிங்கப்பூரில் உள்ள மத்தியஸ்த மையம் ஒன்றின் ஊடாக கொழும்பு கொமர்ஷல் உரம் நிறுவனத்திடம் சீனாவின் Quingdao Seawin Biotech நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக கோரியது.[viii]

மக்கள் வங்கியானது குறித்த நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியதாக 2022 ஜனவரி மாதம் 7ஆம் திகதி தெரிவிக்கப்பட்டுள்ளது. [ix]

எவ்வாறாயினும், 2022 ஜனவரி மாதம் 9ஆம் திகதியன்று, விவசாய அமைச்சர் தெரிவிக்கையில், இந்த கொடுப்பனவினால் நாட்டிற்கு எந்தவிதமான நிதி இழப்பும் ஏற்பாடாது என்றும், இந்த கொடுப்பனவிற்கு பின்னர் இலங்கைக்கு மற்றுமொரு உர இறக்குமதி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.[x]

இதில் இடம்பெற்றுள்ள ஊழல் என்ன?

  • நனோ நைதரசன் திரவ உரத்தினை சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதற்கு பொது நிதியினை தவறாக பயன்படுத்தியமைக்கான சாத்தியம்.[xi]
  • குறித்த உரத்தினை இறக்குமதி செய்ய தேவையான பாரிய செலவினத்திற்கு பொது நிதியினை தவறாக பயன்படுத்தல் மற்றும் இது தொடர்பில் பொறுப்புக்கூறல் வெளிப்படாமை மற்றும் சீனாவின் உர இறக்குமதியில் திறனற்ற நிர்வாக செயற்பாடு.
  • கொள்முதல் நடைமுறையின் சாத்தியமான மீறல்கள் மற்றும் சீனாவின் உர இறக்குமதி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வோரின் தேவையற்ற தனிநபர் நன்மைகள்.
  • வெளிப்படைத்தன்மை இல்லாமை

இதுவரை நடந்த விடயங்கள் என்ன?

  • நனோ நைதரசன் திரவ உரத்தினை கொள்வனவு செய்வதற்கு முறையற்ற விதத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஓர் குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.[xii]
  • நனோ நைதரசன் திரவ உரக் கொள்வனவுக்கு பொது நிதியினை தவறாக பயன்படுத்தியதாக தெரிவித்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஓர் முறைப்பாட்டினை ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்தது.[xiii]

என்ன செய்ய முடியும்?

  • நிராகரிக்கப்பட்ட உரத்திற்கான இருப்புக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ள இலங்கை எவ்வாறு ஒப்புக்கொண்டது என்பது குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
  • நனோ நைதரசன் உர கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறையின் மீது ஓர் சுயாதீன விசாரணையைக் கோருதல்.
  • நாட்டின் தேசிய கொள்கைகளை செயற்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலின் தேவையினை உறுதிப்படுத்தல்.

 

[i] https://www.presidentsoffice.gov.lk/index.php/2021/04/22/importation-of-chemical-fertilizers-will-be-stopped-completely/

[ii] https://www.newsfirst.lk/2021/11/15/rejected-chinese-fertilizer-will-not-be-re-tested-reaffirms-agriculture-dg/

[iii] https://www.newsfirst.lk/2021/10/23/court-order-obtained-to-suspend-payments-for-chinese-fertilizer/

[iv] https://www.newsfirst.lk/2021/11/07/pay-us-us-8-mill-in-3-days-or-else-chinese-fertilizer-co-tells-sri-lanka/

[v] https://www.sundaytimes.lk/211121/news/dispute-over-chinese-organic-fertiliser-govt-backs-down-462783.html

[vi] https://www.newsfirst.lk/2021/11/19/nano-nitrogen-costs-higher-in-sl-than-in-india/

[vii] https://island.lk/nano-nitrogen-deal-opposition-calls-for-probe/

[viii] https://www.newsfirst.lk/2021/12/06/hippo-spirit-arbitration-and-additional-costs/

[ix] https://www.hirunews.lk/english/293292/sri-lanka-pays-over-6-million-to-chinese-fertilizer-ship

[x] https://lankanewsweb.net/archives/1727/nothing-wrong-with-paying-us6-9-million-to-chinese-fertiliser-ship-agriculture-minister/

[xi] https://www.newsfirst.lk/2021/12/01/complaint-alleging-fraud-in-importing-nano-nitrogen-fertilizer-lodged/

[xii] https://www.newsfirst.lk/2021/11/24/criminal-inquiry-underway-on-overpriced-indian-nano-fertilizer/

[xiii] https://www.newsfirst.lk/2021/12/01/complaint-alleging-fraud-in-importing-nano-nitrogen-fertilizer-lodged/