மீளப் பெறப்பட்ட / நீக்கப்பட்ட ஊழல் வழக்குகள்
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொழிநுட்ப பிழைகள் காரணமாக மீளப் பெறப்பட்ட வழக்குகள்.
இல | யாருக்கு எதிராக | குற்றச்சாட்டு | தாக்கல் செய்யப்பட்டது
|
மீளப் பெறக் காரணம்
|
01 | துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன [i] | 2010 மார்ச் 31 தொடக்கம் 2014 மே 31 வரையிலான காலப்பகுதியில் அமைச்சராக பணியாற்றிய போது 41.2 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் சட்ட விரோதமாக பெறப்பட்டமை | இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு | தொழிநுட்ப பிழைகள்காரணாமாக |
02 | முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்[ii] | 2010 டிசம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனம் காணி ஒன்றினை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள தேவையான அறிவுறுத்தல்களை வழங்க தவறியமை. | இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு | தொழிநுட்ப பிழைகள் காரணாமாக |
03 | முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன[iii] | மிஹின் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றிய போது 883 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை | இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு | தொழிநுட்ப பிழைகள்காரணாமாக |
04 | லக்சல நிறுவனத்தின் முன்னாள் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் கொஸ்வத்த மற்றும் ஏனைய மூன்று சந்தேக நபர்கள் ( லக்சல நிறுவன MD லக்ஷ்மி பெரேரா, நிதிப் பிரிவு மேலாளர் சந்தியா பெரேரா மற்றும் திட்ட பணிப்பாளர் உபாலி பெரேரா)[iv] | 2006 ஆம் ஆண்டு முறையான நடைமுறை பின்பற்றப்படாது கொள்முதல் செயற்பாட்டில் ஈடுபட்டமை | இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு | தொழிநுட்ப பிழைகள் காரணாமாக |
05 | அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க[v] [vi] | 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது GI குழாய்களை கொள்வனவு செய்து பகிர்ந்தளிக்க 36.5 மில்லியன் ரூபா பெறுமதியான பொது நிதியினை தவறாக பயன்படுத்தியமை | சட்டமா அதிபர் திணைக்களம் | குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 194 (3) இன் கீழ் குற்றப்பத்திரம் மீள பெறப்பட்டது (முந்தைய திவிநெகும வழக்கினை குறிப்பிட்டு) |
குறிப்பு – CIABOC இன் புதிய தலைவர் மற்றும் ஆணையாளர்களினால் சுமார் 45 வழக்குகள் தொழிநுட்ப பிழைகளுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து மீள பெற முடிவு செய்யப்பட்டதாக சிலோன் டுடே 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதியன்று ஓர் செய்தியினை வெளியிட்டது.[vii]
குறித்த வழக்குகளுக்கு மீள் தாக்கல் செய்யும் நடவடிக்கையின் அடிப்படையில் TISL நிறுவனமானது 2018.01.01 தொடக்கம் 2021.07.10 வரையான காலப்பகுதிக்குள் மீளப் பெறப்பட்ட வழக்குகளை பட்டியலைப் பெற ஒரு தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தினை CIABOC விடம் தாக்கல் செய்துள்ளது.[viii]
இந்த ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட முக்கிய ஊழல் வழக்குகள்
இல | யாருக்கு எதிராக | குற்றச்சாட்டு | தாக்கல் செய்யப்பட்டது
|
தள்ளுபடி செய்யக் காரணம்
|
01 | முன்னாள் DIG வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவி[ix] | மஹரகமவில் ஓர் காணியினை சுவீகரித்தமைக்காக | சட்டமா அதிபர் திணைக்களம் | சட்டமா அதிபர் காலத்தை தாண்டி வழக்கு தாக்கல் செய்திருந்தார் |
02 | அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே[x] | முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் SLFCC யின் தலைவராக இருந்த போது 3.0 மில்லியன் ரூபா பொது நிதியினை தவறாக பயன்படுத்தியதாக கூறப்பட்டது. | சட்டமா அதிபர் திணைக்களம் | போதிய ஆதாரங்கள் இல்லாமை |
03 | அமைச்சர் ஜான்ஸ்டோன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டு பணிப்பாளர் மொஹமட் ஷகீர்[xi] [xii] | 153 சதொச நிறுவன ஊழியர்களை அவர்களது கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்காக 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் பயன்படுத்தியதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது (CIABOC) குறித்த நபர்களுக்கு எதிராக 5 தனித்தனியான வழக்குகளை பதிவு செய்தது. | CIABOC | CIABOC வழக்கு தாக்கல் செய்யும் போது ஏற்பட்ட தொழிநுட்ப தவறுகள் காரணமாக ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஏனைய இரண்டு வழக்குகள் சட்டதிற்கு முரணானவை என்ற அடிப்படையில் குறித்த மூன்று குற்றம் சாட்டப்பட்ட நபர்களும் விடுவிக்கப்பட்டனர்.
அடுத்த இரண்டு வழக்குகள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடையாது. |
04 | சுங்க தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ரஞ்சன் கனகசபா[xiii] | வாகனம் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி அறிக்கையினை வழங்க ஒரு மில்லியன் ரூபா பணத்தினை இலஞ்சம் கோரி பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் | CIABOC | போதிய ஆதாரங்கள் இல்லாமை |
UPDATE – 2022 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டபடி, பல்வேறு காரணங்களுக்காக மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. – Click Here
__________________________________________________________________________
[i] https://ceylontoday.lk/news/rohitha-released-from-case
[ii] https://ceylontoday.lk/news/bribery-commission-will-withdraw-case-against-mohan-peiris
[iii] https://ceylontoday.lk/news/case-against-sajin-vass-withdrawn
[iv] https://ceylontoday.lk/news/laksala-ex-chairman-three-others-released-from-ciaboc-procurement-case
[v] https://asianmirror.lk/news/item/33683-basil-rajapaksa-and-kithsiri-ranawaka-acquitted-from-divineguma-case-as-attorney-general-withdraws-indictment
[vi] https://www.newsfirst.lk/2021/10/15/ag-withdraws-indictments-against-basil-in-gi-pipe-case/
[vii] https://ceylontoday.lk/news/ciaboc-withdrawing-around-45-bribery-cases-defence-counsel
[viii] https://www.rtiwatch.lk/requests/?drawer1=CIABOC%20withdrawn%20cases
[ix] https://www.newswire.lk/2021/03/15/former-dig-vass-gunawardena-wife-released-from-a-case/
[x] https://www.dailymirror.lk/breaking_news/Mahindananda-Aluthgamage-acquitted-and-released/108-206596
[xi] https://www.newswire.lk/2021/01/15/court-discontinues-case-agast-jognston-fernando/
[xii] https://ceylontoday.lk/news/johnston-and-two-others-released
[xiii] http://www.dailynews.lk/2021/01/23/law-order/239640/customs-director-acquitted-after-lengthy-bribery-trial