2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க நிதிச் சட்டம்
விளக்கம்:
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஓர் நிதி (திருத்தப்பட்ட) மசோதாவானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, இம்மசோதாவானது வெளிநாட்டில் வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு வரி விலக்களிக்க முயல்கிறது. அதாவது எந்தவித கேள்விகளும் கேட்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியுடன் அவர்கள் தானாக முன்வந்து அவர்களின் வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை வெளிப்படுத்தினால் அத்தகைய சொத்துக்களுக்கு 1% வரி விகிதத்தில் நாட்டிற்கு கொண்டு வர முடியும். கோவிட் – 19 தொற்றுப்பரவல் காரணாமாக மோசமான பொருளாதாரத்தின் பின்னணி மற்றும் பண தூய்தாக்கல் குறித்த பரவலான காலப்பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இடம்பெற்றுள்ள ஊழல் என்ன?
ஒரு பரந்த பெரிய குழுவினை வரி செலுத்தும் வகையில் கொண்டு வருவதற்காகவே பொதுவாக வரி விலக்கு வழங்கப்படுகிறது. முறையான வழிகளில் பணம் சம்பாதித்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாதவர்களை இலக்காக கொண்டே அத்தகைய வரி விலக்கு வழங்கப்படுகிறது.
நிதிக் கட்டமைப்பில் குற்றச் செயற்பாடுகள் இடம்பெற குற்றவாளிகளால் வரி விலக்கானது தவறாக பயன்படுத்தப்படக்கூடாது. வரி விலக்கு வழங்கப்பட்டதே மிகப்பெரிய ஊழலுக்கான கரிசனை ஆகும். ஒழுங்குபடுத்தல் அதிகாரிகளினால் வரி விலக்கு திட்டத்தினுடாக வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை கண்காணிக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடின் அது கறுப்புப் பணத்தினை தூய்தாக்கல் செய்வதற்கு வழிவகுக்கும் (உ+ம்: தூய்தாக்கல் என்பது குற்றச் செயல் அதாவது சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் மற்றும் முறையான நிதி கட்டமைப்பினுள் நுழைய அனுமதிப்பதனூடாக அதை சுத்தமாக காட்டுவதற்கு இத்திட்டம் தவறாக பயன்படுத்தப்படும்).
பாதிக்கப்பட்டவர்கள் யார்?
பொது மக்களே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் – வரி விலக்கு திட்டத்தை தவறாக பயன்படுத்தி குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட வருவாய் பண தூய்தாக்கல் செய்யப்படுவதனால் பொது மக்களுக்கு பாதகமான பாதிப்புக்கள் ஏற்படலாம். ஏனெனில், அவை பயங்கரவாத நிதி, போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நிதி, ஆட்கடத்தல், நாட்டின் பொது நிதியின் துஷ்பிரயோகம் போன்றவற்றினூடாக பெறப்பட்டிருக்கலாம். முறையாக வரிப் பணத்தினை செலுத்துவோருக்கும் வரி செலுத்த பின்வாங்குதல், நேர்மையான முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை இழக்க நேரிடல், வியாபார/ வணிக நடவடிக்கைகளுக்கு சாதகமற்ற பொருளாதார சூழலை ஏற்படுத்துதல் போன்ற பாதகமான பொருளாதார விளைவுகளை உருவாக்கும்.
இதுவரை நடந்த விடயங்கள் என்ன?
- வரி விலக்கல் மசோதாவுக்கு எதிராக அரசியலமைப்பினை அடிப்படையாகக் கொண்டு எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி (SJB), JVP மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவையும் மனுதாரர்களின் பட்டியலில் அடங்குகிறது. சில சிறிய மாற்றங்களுடன் குறித்த மசோதாவானது நிறைவேற்றப்படலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. [i] [ii]
- எவ்வாறாயினும், 2021 செப்டம்பரில் சிறு மாற்றங்களுடன் இம்மசோதாவானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. [iii]
- TISL நிறுவனமானது பணம் தூய்தாக்கல் அபாயங்களுக்கான சாத்தியக்கூறுகளை மையப்படுத்தி ஓர் ஊடக அறிக்கையினை வெளியிட்டது மேலும் வரி விலக்கு செயற்பாட்டின் கண்காணிப்பினை மேம்படுத்தவும் பரிந்துரைத்தது. [iv]
என்ன செய்ய முடியும்?
இச்சட்டத்தினூடாக ஊழல் சவால்களை குறைக்க உரிய அதிகாரசபைகளுக்கான TISL நிறுவனத்தின் பரிந்துரைகள்:
- பண தூய்தாக்கலுக்கு எதிரான செயற்பாடுகளையும் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிதியுதவி தடுப்பு நடவடிக்கைகளையும் திறம்பட செயற்படுத்துவதை உறுதி செய்தல்
- சம்பந்தப்பட்ட அதிகார சபைகளுக்கிடையே உள்நாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்தல்
- கறுப்புப் பண பரிமாற்றங்களை கண்டுபிடிக்க வழங்கப்படும் சர்வதேச ஒத்துழைப்பினை பாதுகாத்தல்
[i] https://www.ft.lk/front-page/Centre-for-Policy-Alternatives-challenges-tax-amnesty-bill-in-SC/44-720884
[ii] https://economynext.com/sri-lanka-tax-amnesty-bill-allowed-with-changes-by-supreme-court-85147/
[iii] https://economynext.com/sri-lanka-parliament-passes-tax-amnesty-bill-opposition-abstains-from-sec-bill-85901/
[iv] https://www.tisrilanka.org/tisl-recommends-enhanced-scrutiny-in-operation-of-the-tax-amnesty/