இலங்கை மின்சார சபை (CEB)
விவரணம்
இலங்கை மின்சார சபை (CEB) என்பது நாடு முழுவதும் மின்சாரத்தை உற்பத்தி செய்தல், பரிமாற்றம் செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பொறுப்புகளை வகிக்கும் இலங்கை அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகும். அண்மைய ஆண்டுகளில், குறிப்பாக 2024 ஆம் ஆண்டில், ஊழல், வினைத்திறனின்மை மற்றும் தவறான முகாமைத்துவம் தொடர்பான குற்றச்சாட்டுகளால் இலங்கை மின்சார சபை பொதுமக்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இப்பிரச்சினைகள் மின்சாரக் கட்டண அதிகரிப்பு, தொடர்ச்சியான நிதி இழப்புகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு மாறுதல் உள்ளிட்ட எரிசக்தித் துறையில் அவசியமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் ஆகியவற்றுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
தனியார் மின்சார உற்பத்தியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஒப்பந்தங்கள், கொள்முதல் செயல்முறைகளில் நிலவிய வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் நிர்வாக சபை மட்டத்திலான தீர்மானங்களில் இடம்பெற்ற அரசியல் தலையீடுகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் கண்டனங்கள் தீவிரமடைந்தன.
இத்தகைய குற்றச்சாட்டுகள், நாட்டின் எரிசக்திக் கொள்கை தனிப்பட்ட நலன்களுக்காகக் கையாளப்படுகின்றதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, பொதுமக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதாகவும் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கண்டறியப்பட்ட ஊழல்
2024 இல், நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபையினால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL)) விதந்துரைக்கப்பட்டவை உட்பட, பல புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களுக்கான அங்கீகாரத்தை CEB திட்டமிட்டு தாமதப்படுத்தியதாக புதிதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது உள்ளக தடை(முரண்பாடு)
மற்றும் நாசவேலை குறித்த பாரதூரமான கரிசனைகளை எழுப்பியது.
சபை உறுப்பினர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட (CEB) இன் சிரேஷ்ட அலுவலர்கள், படிம எரிபொருள் இறக்குமதிகள் மற்றும் அவசரநிலை மின்சார கொள்வனவுகளுடன் தொடர்புடைய சுயநல நலன்களை பாதுகாப்பதற்காக, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைத் தடுக்கும் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தி வந்ததாக கசிந்துள்ள உள்ளக தொடர்பாடல்கள் மற்றும் சாட்சியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வெளிப்படைத்தன்மையும் முறையான நியாயப்படுத்தலும் இல்லாத அதிக செலவான உடன்படிக்கைகளை மேற்கொண்டு> 2024 ஆம் ஆண்டிலும் அவசரநிலை மின்சக்திக் கொள்வனவுகளுக்கான போட்டியுள்ள விலைகூறல் நடைமுறைகளை மீண்டும் புறக்கணித்ததாக CEB குற்றஞ்சாட்டப்பட்டது.
தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்திருந்த போதும்> பல சூரிய மற்றும் காற்று மின்சக்தி திட்ட மேம்படுத்துநர்கள் தங்களது முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபை (CEB) இனால் காலவரையறையின்றி தாமதப்படுத்தப்பட்டதாக அல்லது தன்னிச்சையான மறுமதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பொதுவாக குற்றம்சாட்டினர். “காரியங்களை விரைவாக செயற்படுத்த” சிலரிடம் முறைசாரா கொடுப்பனவுகள் அல்லது தொடர்புகள் கோரப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன
அத்தகைய அங்கீகாரங்கள் மீது மேற்பார்வை அதிகாரம் முன்னர் கொண்டிருந்த PUCSL ஆனது, முக்கிய முக்கிய தீர்மானங்களில் புறக்கணிக்கப்பட்டதுடன்> அதன் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டன. இது> CEB நிறுவனத்திற்குள் கட்டுப்பாடற்ற முடிவெடுப்பை மையப்படுத்தும் முயற்சிகள் குறித்த எச்சரிக்கை அறிகுறிகளை எழுப்பியது.
2024 ஆம் ஆண்டில் வெளியான அறிக்கைகள், CEB நியமனங்களில் அரசியல் தலையீடு இடம்பெற்றதாகவும், CEB சபைக்கான நியமனங்களில், வலுசக்தி துறையில் போதிய தொழில்நுட்பப் பின்னணி அல்லது அனுபவம் இன்றி அரசியல் தொடர்புடைய பல்வேறு தனிநபர்கள் நியமிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டின.
2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புலனாய்வுசார் அறிக்கைகள், அவசரநிலை நியதிகளின் கீழ் ஒரே கம்பெனிகள் மீண்டும் மீண்டும் மின்சக்தி கொள்வனவு ஒப்பந்தங்களைப் பெறுகின்ற சம்பவங்களை எடுத்துக்கூறின; இது, முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அல்லது கூட்டுச்சதியை சுட்டிக்காட்டுகின்றது.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தியில் காணப்படும் தாமதங்கள் தொழில்நுட்ப காரணங்களினால் அல்லாமல், CEB இனுள் இருக்கும் நிலையைப் பேணுவதன் மூலம் நன்மைபெறும் ஒரு செயற்பாட்டாளர்கள் குழுவினால் வேண்டுமென்று ஏற்படுத்தப்படும் தடை காரணமாகவாகும் என TISL உட்பட சிவில் சமூகங்கள் அக்கறைகளை எழுப்பியுள்ளன.
2024 ஆம் ஆண்டில் ஒப்பந்தங்கள், மதிப்பீட்டு அளவுகோள்கள் அல்லது பெறுகை ஆவணப்படுத்துகை என்பவற்றை முன்கூட்டி வெளியிடாமை, இரகசியத்தன்மை மற்றும் ஊழல் குறித்த அக்கறைகளை மேலும் மீளவலியுறுத்தியது.
ஊழலில் சம்பந்தப்பட்ட பணப்பெறுமதி
இழப்புக்கள் மற்றும் ஒழுங்கற்ற கொடுக்கல்வாங்கல்களின் துல்லியமான பணப்பெறுமதி முழுமையாக வெளிவிடப்படாத அதே நேரம்> 2024 ஆம் ஆண்டின் செய்திக் கட்டுரைகளுக்கு இணங்க> புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அங்கீகாரங்களிலான தாமதங்கள்> அவசரநிலை மின்சக்திக்கான போட்டியுள்ள விலைகூறலை தவிர்த்தல் மற்றும் அரசியல் ரீதியில் செல்வாக்குக்குட்பட்ட ஒப்பந்த அளிப்புகள் உட்பட CEB இன் ஊழல் செயன்முறைகள் ஆகக்குறைந்தது 50-70 பில்லியன் ரூபா மதிப்பிலான நிதி இழப்புக்களுக்கு இட்டுச்சென்றுள்ளன. இவ்விழப்புக்கள்> அதிக விலைகொண்ட அவசரநிலை மின்சக்தி ஒப்பந்தங்கள்> மலிவான புதுப்பிக்கத்தக்க சக்திக்கான வாய்ப்புக்களை இழத்தல் மற்றும் வினைத்திறனற்ற கொள்முதல் என்பவற்றினால் எழுகின்றன.
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
TISL ஆனது> CEB இனுள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல் மற்றும் ஆளுகைத் தவறுகைகளை வெளிக்கொணர்வதற்கும் எடுத்துக்கூறுவதற்கும் பத்திரிகை அறிக்கைகள்> கட்டுரைகள்> மற்றும் ஊடகத்தில் தோன்றுதல் மூலம் பொதுத் தலையீடுகளை மேற்கொண்டது. இவை> புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அங்கீகாரங்களிலான தாமதங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையின்றி அவசரநிலை மின்சக்தி கொள்வனவுகளைத் தொடர்வதனால் ஏற்படும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டுவதை உள்ளடக்கின.
மின்சக்தி கொள்வனவு உடன்படிக்கைகள்> தாமதமான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அங்கீகாரங்கள் தொடர்பான கடிதத் தொடர்புகள் மற்றும் சபை முடிபுகள் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கு தகவலுக்கான உரிமையின் (RTI) பயன்பாட்டை TISL ஆதரித்தது. இந்த RTI மூலமான கண்டுபிடிப்புகள்> பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கும் ஊடகம் மற்றும் பரிந்துரை முயற்சிகளை ஆதரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன.
TISL ஆனது> CEB இல் வெளிப்படையான பெறுகை செயன்முறைகள்> சுயாதீன மேற்பார்வை மற்றும் சபை நியமனங்களை அரசியல் மயப்படுத்தப்பட்ட தற்றதாக்குதல் உட்பட நிறுவனம்சார் சீர்திருத்தங்களைக் கோரியது. இவ்விதப்புரைகள்> இயைபான அரசாங்க நிறுவனங்களுடனும் அக்கறை கொண்டுள்ளோர்களுடனும் பகிரப்பட்டன
தன்னல அக்கறை கொண்டுள்ளவர்களினால் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக் கருத்திட்டங்கள் தடுக்கப்படுதல் மற்றும் வலுசக்தி கொள்கை சூழ்ச்சித்திறத்துடன் கையாளப்படுதல் பற்றி சிவில் சமூக குழுக்களும் வலுசக்தித் துறை நிபுணர்களும் 2024 ஆம் ஆண்டில் சுயாதீனமாக எச்சரிக்கைகளை எழுப்பினர். சில மேம்படுத்துநர்களும் தொழில் தொடர்புடைய அக்கறைகொண்டுள்ளோரும் சாட்சியங்களுடனும் ஆவணங்களுடனும் முன்வந்தனர்.
பத்திரிகையாளர்களும் சுயாதீன ஊடக நிறுவனங்களும்> சில திட்டங்கள் எவ்வாறு திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டன என்பதையும்> மேலும் CEB இனுள் செயல்பட்ட ஒரு சிறிய குழு தனிப்பட்ட அல்லது அரசியல் நலன்களுக்காக முக்கிய தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தியது என்பதையும் வெளிக்கொணரும் வகையில்> 2024 ஆம் ஆண்டில் தொடர் புலனாய்வு அறிக்கைகளை வெளியிட்டன.
TISL மற்றும் ஏனைய பொறுப்புக்கூறும் அமைப்புகள், பொதுப் பயன்பாட்டு நிறுவனங்களில் அரச ஆதிக்கமும் ஊழலும் ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக்காட்டுவதற்காக CEB சம்பவத்தை பயன்படுத்தின. அதேவேளை, குறிப்பாக பொது வளங்களை கையாளும் துறைகளில் பரந்தளவிலான கட்டமைப்புசார் சீர்திருத்தங்களையும் கோரின.
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்
ஏல ஆவணங்கள், தெரிவு அளவுகோல்கள், வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் விலை விபரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பொதுமக்கள் அணுகக்கூடிய இணைய தளத்தில் வெளியிடுதல் உட்பட, மின்சக்தி கொள்முதல் செயல்முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை கட்டாயமாக்குதல்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) வகிபாகத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளைத் தடுக்கும் வகையில்> அனைத்து முக்கிய மின்சக்தி தொடர்பான முடிவுகளை ஒழுங்குபடுத்தவும்> அங்கீகரிக்கவும் மற்றும் மேற்பார்வை செய்யவும் அதற்கு வலுவான சட்ட அதிகாரமும் சுயாதீனத்தன்மையும் வழங்குதல்.
விசாரணைகள் முடிவடையாத நிலையில்> புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களுக்கு தடையாக இருந்த அல்லது ஒழுங்கற்ற கொள்முதல் முடிவுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை இடைநிறுத்துதல் அல்லது பதவியிலிருந்து நீக்குதல். நம்பகமான சான்றுகள் உள்ள சந்தர்ப்பங்களில்> இது நிர்வாகக் குழு உறுப்பினர்கள்> பொறியியலாளர்கள் அல்லது சிரேட்ட முகாமைத்துவ உறுப்பினர்களையும் உள்ளடக்கும்.
சான்றுகள் ஊழல் நடவடிக்கைகள், அதிகார துஷ்பிரயோகம் அல்லது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவுகளின் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதை வெளிப்படுத்தினால், அத்தகைய செயல்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக நாட்டின் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் வழக்குகள் தொடுத்தல்.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட அனைத்து மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களையும் கணக்காய்வு செய்தல்; குறிப்பாக போட்டி அடிப்படையிலான ஏல முறையைத் தவிர்த்து செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்கு கவனம் செலுத்துதல்; மேலும் பிரச்சினைக்குரிய வழக்குகளை சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தல்.
இணைப்புகள்
350 மெகாவாட் மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் ஏற்பட்ட அக்கறைசார் முரண்பாடு தொடர்பாக> முன்னாள் CEB தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டியவுக்கு எதிராக CIABOC-இல் செய்யப்பட்ட முறைப்பாடு: https://ceylontoday.lk/2025/07/05/ciaboc-complaint-against-former-ceb‑chair/
கலாநிதி சியம்பலாபிட்டியாவின் ஆலோசனை நிறுவனமானது அவரது நியமனத்திற்குப் பின்னரும் இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஆகியவற்றுடன் தொடர்ந்து பணியாற்றியதாக குற்றச்சாட்டு தொடர்பாக மின்சார நுகர்வோர் சங்கம் (ECA) செய்யப்பட்ட முறைப்பாடு:
https://www.themorning.lk/articles/Tu2SgFoDmCv2Jd5DXbqR
லங்காசராவின் செய்தி வெளியீடு: எல்டிஎல் ஹோல்டிங்ஸ் உடன் செய்யப்பட்ட சஹஸ்தனவி திட்ட ஒப்பந்தம் தொடர்பான அக்கறைசார் முரண்பாடு குறித்த விரிவான அறிக்கை:
https://lankasara.com/news/former‑ceb‑chairman‑faces‑ciaboc‑complaint‑over‑conflict‑of‑interest/