இந்திய வீடமைப்பு திட்டம் 2010

விவரணம்

2010 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசாங்கமும்  இலங்கை அரசாங்கமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இருதரப்பு அரசாங்கங்களும் ஒன்றிணைந்து  இந்திய வீடமைப்பு கருத்திட்டத்துக்கு ஒத்துழைத்து வருகின்றன. இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் நீண்டகாலமாக நிலவும் புறக்கணிப்பு மற்றும் அடிப்படை வசதிகளற்ற மற்றும் தரமற்ற வீடமைப்புகளை அடையாளம் கண்டு இந்த கருத்திட்டம் பெருந்தோட்டப் பிரதேசங்களில் முக்கியமாக மத்திய மலைநாடு மற்றும் ஏனைய முக்கிய மாவட்டங்களில் நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய சுகாதார மற்றும் பாதுகாப்பான வீடுகளை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இந்தக் கருத்திட்டம் பல கட்டங்களாக முன்னேற்றமடைந்துள்ளது. அதன் மிக அண்மைய நான்காவது கட்டம் 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கட்டம் இலங்கையின் தோட்டப்புறங்களில் நலனை அதிகரிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் வாக்குறுதியைத் நிறைவேற்றும் வகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. வரலாற்று ரீதியாக வறுமைஇ நெரிசல் மற்றும் தரம் குறைந்த உட்கட்டமைப்பை எதிர்நோக்கிய சமுதாயங்களில் உள்ள ஒரு முக்கிய தேவையை நிவர்த்தி செய்யும் வகையில்  இற்றைவரை 10>000 இற்கு மேற்பட்ட வீடுகள் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன அல்லது நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

இத்திட்டமானது இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களினால் கூட்டாக நிர்வகிக்கப்படுவதுடன்> கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நிதி ஒதுக்கீடு> கட்டுமான ஒப்பந்தங்கள் மற்றும் இராஜதந்திர மேற்பார்வை போன்ற விடயங்களை ஒருங்கிணைத்து வருகின்றது. இந்த கூட்டு முயற்சியானது இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு முக்கிய அடையாளமாக விளங்குவதுடன்> ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கண்டறியப்பட்ட ஊழல்

இந்திய வீடமைப்புத் திட்டமானது> பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டது; ஆனால்> இதன் ஆரம்பத்திலிருந்தே ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்யும் செயன்முறை வெளிப்படைத்தன்மையற்றதாக இருந்ததோடு> கேள்விப்பத்திரம் கோரும் நடைமுறைகள் குறித்த தகவல்களும் பொதுமக்களுக்கு மிகக் குறைந்தளவிலேயே வெளிப்படுத்தப்பட்டன.

தெளிவான அல்லது தரப்படுத்தப்பட்ட அளவுகோல்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படாமல் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன; இது, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு இடையே ஒருபக்க சார்புநிலை, உறவுமுறைச் சலுகை அளித்தல் மற்றும்  கையூட்டல்களைப்  பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது.

கட்டுமானங்களின் ஆரம்பக் கட்டங்கள், அவற்றின் நிறைவுபெறும் திகதிகள், மீண்டும் மீண்டும் பிற்போடப்பட்டதன் காரணமாகக் குறிப்பிடத்தக்க தாமதங்களை எதிர்நோக்கின; இது பலவீனமான திட்ட முகாமையையும், தனிப்பட்ட ஆதாயங்களுக்காகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட சாத்தியமான காலதாமதங்களையும் சுட்டிக்காட்டியது.

பல்வேறு கட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், முறையான நியாயப்படுத்துதல்கள் அல்லது பொதுமக்களுக்கான விளக்கங்கள் எதுவுமின்றி சில சந்தர்ப்பங்களில் பாரியளவில் அதிகரிக்கப்பட்டன; இது, நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை அல்லது முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறித்த பலத்த சந்தேகங்களை  எழுப்பியுள்ளது.

வீடுகளின் பாதுகாப்பு மற்றும் நீடித்த பயன்பாட்டை ஆபத்துக்குள்ளாக்கும் வகையில், தரம் குறைந்த செங்கற்கள் அல்லது சிமெந்து போன்ற தரமற்ற கட்டுமானப் பொருட்களின் பயன்பாடு மற்றும் போதியளவற்ற வேலைப்பாடுகள் குறித்து அறிக்கைகளும் முறைப்பாடுகளும் வெளிவந்தன.

பயனாளிகளான பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது சமூகத்தினரும்> மேற்பார்வை அல்லது கண்காணிப்புச் செயல்பாடுகளில் பங்கேற்பதிலிருந்து பெருமளவில் தவிர்க்கப்பட்டனர்; இது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மீதான சரிபார்ப்புகளை வரையறுத்ததுடன்> முறைகேடுகள் தொடரவும் வழிவகுத்தது.

முறையான சுயாதீன மேற்பார்வை அல்லது கணக்காய்வுப் பொறிமுறைகள் பலவீனமாக இருந்தன> போதியளவு அமுலாக்கப்படவில்லை அல்லது முற்றாகவே அற்றுப்போயிருந்தன; இது வெளிப்புறப் பொறுப்புக்கூறலைக் குறைத்ததுடன்> ஊழல் நடைமுறைகள் கண்டறியப்படாமலும் அல்லது தண்டிக்கப்படாமலும் தொடர்ந்து இடம்பெறுவதற்கு வழிவகுத்தது.

பலவீனமான கட்டுப்பாடுகள் காரணமாக> வீடமைப்பு கட்டுமானங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதிகள் திசைதிருப்பப்படுதல்> கையாடல் செய்யப்படுதல் அல்லது இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்களினால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுச் சுரண்டப்படும் ஆபத்துகளை எதிர்கொண்டன.

பொதுமக்கள் அணுகக்கூடிய வகையிலான நிதி அறிக்கைகள், திட்ட இற்றைப்படுத்தல்கள் (Updates) அல்லது முன்னேற்றக் காட்சிப் பலகைகள் (Progress dashboards) இல்லாமையினால் வெளிப்படைத்தன்மை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டது; இது, பிரஜைகளையும் சிவில் சமூகத்தையும் வளங்களின் பயன்பாடு மற்றும் திட்ட விளைவுகளைப் பயனுள்ள முறையில் கண்காணிப்பதில் இருந்து தடுத்தது.

திட்ட மேற்பார்வைக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிகள், பக்கச்சார்பின்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையிலும் ஊழல் சார்ந்த தீர்மானங்களை எடுக்கும் ஆபத்தை அதிகரிக்கும் வகையிலும் ஒப்பந்தக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததால், அக்கறைசார்

முரண்பாடுகள் எழுந்தன.

குறைதீர்ப்புப் பொறிமுறைகள் போதுமானதாக இருக்கவில்லை அல்லது முற்றிலும் செயலிழந்திருந்தன; இது தரம் குறைந்த வேலைப்பாடுகள், காலதாமதங்கள் அல்லது சந்தேகிக்கப்படும் ஊழல் குறித்துப் புகாரளிப்பதற்கான தெளிவான வழிகள் ஏதுமின்றிப் பயனாளிகளை நிர்க்கதிக்குள்ளாக்கியது.

ஊழலில் சம்பந்தப்பட்ட பணப்பெறுமதி

மூல ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

பெறுகை மற்றும் கொள்முதல் செயன்முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, அனைத்துக் கேள்விப்பத்திர ஆவணங்களையும், ஒப்பந்தக்காரர் தெரிவிற்கான அளவு கோல்களையும், வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த விபரங்களையும் இணையத்தில் பகிரங்கமாக வெளியிடுதல் வேண்டும்.

கட்டுமானத் தரம் மற்றும் காலக்கெடுவை முறைப்படி கண்காணிப்பதற்காக, பயனாளிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள்  உள்ளடங்கிய சுயாதீன மேற்பார்வைக் குழுக்களை அமைத்தல் வேண்டும்.

திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் நிதி விநியோகங்களை  துல்லியமாகக் கண்காணிப்பதற்கும்> முறைப்பாடுகள் அல்லது குறைபாடுகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஏதுவாக> பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய ஒரு டிஜிட்டல் தளத்தை உருவாக்குதல் வேண்டும்.

திட்டக் காலதாமதங்கள்> தரம் குறைந்த வேலைப்பாடுகள் அல்லது ஊழல் நடைமுறைகள் குறித்துப் பாதுகாப்பாகவும்> தங்களது விபரங்களை வெளிப்படுத்தாத முறையிலும் புகாரளிப்பதற்கு ஏதுவாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எளிதில் அணுகக்கூடிய தெளிவான குறைதீர்ப்புப் பொறிமுறைகளை நிறுவுதல் வேண்டும்.

பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் முறைகேடுகளைத் தடுப்பதற்கும் ஏதுவாக>தொடர்ச்சியான மற்றும் சுயாதீனமான நிதி மற்றும் தொழில்நுட்பக் கணக்காய்வுகளை நடத்தி> அவற்றின் முடிவுகளைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

பொறுப்புக்கூறும் தன்மையை அதிகரிக்கவும்> திட்டத்தின் மீதான உரிமையுணர்வை வளர்க்கவும் ஏதுவாக> அதன் திட்டமிடல்> கண்காணிப்பு மற்றும் தீர்மானம் எடுத்தல் ஆகிய செயல்பாடுகளில் பெருந்தோட்டச் சமூகங்களை நேரடியாக ஈடுபடுத்துதல் வேண்டும்.

திட்ட அமுலாக்கத்திலுள்ள சிக்கல்கள் மற்றும் ஊழல் ஆபத்துகளை உடனுக்குடன் கையாள்வதற்காக> கூட்டு மேற்பார்வை மன்றங்கள் மூலமாக இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பைப் பலப்படுத்துதல் வேண்டும்.

திட்டப் பணியாளர்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு ஊழலுக்கு எதிரான சிறந்த நடைமுறைகள்> நெறிமுறைசார் கொள்முதல் மற்றும் நல்லாட்சிக் கோட்பாடுகள் குறித்துப் பயிற்சிகளை வழங்குதல் வேண்டும்.

திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும்> முறைகேடுகளைத் வெளிக்கொணர்வதற்கும்> வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டுவதற்கான அழுத்தத்தைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கும் ஏதுவாக> சிவில் சமூகம் மற்றும் ஊடகங்களின் முனைப்பான ஈடுபாட்டை ஊக்குவித்தல் வேண்டும்.

ஒருபக்க சார்புநிலையைத் தடுக்கவும்> பக்கச்சார்பற்ற திட்ட நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் ஏதுவாக> அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்குக் கண்டிப்பான அக்கறைசார் முரண்பாட்டுக் கொள்கைகளை கடுமையான முறையில் அமுலாக்குதல் வேண்டும்.

மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

கேள்விப்பத்திர ஆவணங்கள்> மதிப்பீட்டு அளவுகோல்கள் மற்றும் ஒப்பந்தகாரர்;களை தெரிவு செய்தல் போன்ற விடயங்களைப் பகிரங்கமாகப் பகிர்வதன் மூலம் ஒப்பந்ததாரர் தெரிவில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல்.

நிர்மாணத் தரம் மற்றும் திட்டம் முடிவடையும் காலவெல்லைகளை மேற்பார்வையிட பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை உள்ளடக்கிய சுயாதீன கண்காணிப்புக் குழுக்களை தாபித்தல் வேண்டும்.

கருத்திட்ட முன்னேற்றம், வரவு செலவுத் திட்டங்கள், நிதிச் பங்கீடுகள் மற்றும் முறைப்பாடுகளை நிகழ்நிலையில் கண்காணிக்க, பொதுமக்கள் அணுகத்தக்கதான ஒரு தரவுத்தளத்தினை உருவாக்குதல் வேண்டும்.

பழிவாங்கல்களுக்குப் பயப்படாமல், தரம் குறைந்த வேலைப்பாடுகள், காலதாமதங்கள் அல்லது சந்தேகிக்கப்படும் ஊழல் நடைமுறைகள் குறித்துப் பாதுகாப்பாகப் புகாரளிப்பதற்குப் பயனாளிகளுக்கு வழிவகை செய்யும் வகையில், குறைதீர்ப்புப் பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்துதல் வேண்டும்.

திட்ட அமுலாக்கத்தின் போது, தொடர்ச்சியாகவும் வழக்கமான முறையிலும் சுயாதீன நிதி மற்றும் தொழில்நுட்பக் கணக்காய்வுகளை நடத்தி, அக்கணக்காய்வு அறிக்கைகளைப் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் பொதுவெளியில் பகிரங்கமாகக் கிடைக்கக் கூடியதாக்குதல் வேண்டும்.

பொறுப்புக் கூறும் தன்மையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் ஏதுவாக, திட்டமிடல் மற்றும் கண்காணிப்புச் செயல்பாடுகளில் சமூகப் பங்களிப்பை ஊக்குவித்தல் வேண்டும்.

திட்ட அமலாக்கத்தை பரிசீலனை செய்வதற்கும், சவால்களைக் கூட்டு முயற்சியுடன் கையாள்வதற்கும் ஏதுவாக, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையே கூட்டு மேற்பார்வை பொறிமுறைகளை எளிதாக்குதல் வேண்டும்.

நல்லாட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான சிறந்த நடைமுறைகள் குறித்து, உள்ளூர் அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சமூகக் கண்காணிப்பாளர்களுக்குப் பயிற்சிகளையும் திறன்விருத்திச் செயல்பாடுகளையும் வழங்குதல் வேண்டும்.

திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணித்து அறிக்கையிடுவதன் மூலமும், முறைகேடுகளை வெளிக்கொணர்வதன் மூலமும், சிவில் சமூகமும் ஊடகங்களும் தங்களது வினைத்திறனான கண்காணிப்பு நடவடிக்கைளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஊக்குவித்தல் வேண்டும்.

திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வையில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதி செய்யவதற்கு உறுதியான அக்கறைசார் முரண்பாட்டுக் கொள்கைகளை அமுல்படுத்துதல்

இணைப்புகள்

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் – இந்திய வீடமைப்புத்திட்ட மேலோட்டம் திட்டத்தின் நிலைகள், இலக்குகள் மற்றும் சாதனைகள் பற்றிய முழுமையான விபரங்களை வழங்குகின்றது.

https://www.hcicolombo.gov.in/page/indian-housing-project/

ஐக்கிய நாடுகளின்-ஹபிற்றாட் நிறுவனம் – இலங்கையில் இந்திய வீட்டுத் திட்டம்: மக்களின் பங்களிப்பு மற்றும் நிலையான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்ற விபரங்களை வழங்குகிறது.@

https://unhabitat.net/projects/sri_lanka/detail17_en.html

தமிழ் கார்டியன் – வீடமைப்பு ஒதுக்கீட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு: வீடுகள் ஒதுக்கீட்டின் போது தொழிற்சங்க உறுப்பினர்களுக்குச் சார்பாகச் செயற்பட்டதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கை:

https://www.tamilguardian.com/content/cwc-accused-corruption-when-allocating-homes-indian-housing-project

த மோர்னிங் – IVஆம் கட்ட நடைமுறைப்படுத்துகை தொடர்பான கரிசனைகள்: அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்திய வீடமைப்புத்திட்டத்தின் IV ஆம் கட்டம் தொடர்பாக எழுந்துள்ள கரிசனைகள் குறித்து கலந்துரையாடுகின்றது.

https://www.themorning.lk/articles/k4Tw1L5NuBVrF6SKMeGx

ஏனைய இணைப்புகள்:

m.https://economynext.com/india-begins construction-of-1300-houses-for-sri-lanka-plantation-workers-151457/

  1. https://www.adaderana.lk/news.php?nid=97383

,.   https://economynext.com/india-to-construct-

10000-houses-in-sri-lanka-plantation-areas-141875/

 

 

This website uses cookies to improve your web experience.