இம்யூனோகுளோபுலின் ஊழல்
விவரணம்
2024 ஏப்ரல் மாதத்தில்> சுகாதார அமைச்சினால் அவசரநிலை கொள்முதல் முறைகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட மனித இம்யூனோகுளோபுலின் தொகுதி தரமற்றதாகவும்> செயல்படும் கூறுகள் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாததாகவோ இருந்தது என வெளிப்படுத்தப்பட்டது. இந்த தரமற்ற மருந்துகள் ஏற்கனவே அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டிருந்ததால்> நோயாளி பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தவறுகள் குறித்த பாரிய கரிசனைகள் எழுந்தன.
இந்த மருந்துகள்> உண்மையான மருத்துவ அவசரநிலைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபை (NMRA) வழங்கும் பதிவு விலக்கு (WOR) முறையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டன
விசாரணைகள்> Isolez Biotech என்ற வழங்குநர் குறைந்தபட்ச தரநிலைகளை பூர்த்தி செய்யாதிருந்த போதிலும் அங்கீகரிக்கப்பட்டதாகவே விசாரணைகள் காட்டுகின்றன. இவ்வாறான அவசர கொள்முதல் நடைமுறை 2023 ஆம் ஆண்டிலும் இதே போன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும்> எந்த திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பதிவு விலக்கை (WOR) மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வழக்கமான ஒழுங்குமுறை பரிசோதனைகளை தவிர்த்ததும் முந்தைய வழங்குநர் தோல்விகளை புறக்கணித்ததும்> மருந்து கொள்முதல் மற்றும் அனுமதி செயல்முறையில் கடுமையான குறைபாடுகள் அல்லது தவறான பயன்பாடு இருப்பதை சுட்டிக்காட்டியது. இதனால் ஊழல்> அலட்சியம் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் தனியார் வழங்குநர்களுக்கிடையிலான சாத்தியமான கூட்டுச் சதி குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்குப் பதிலளிக்கும் முகமாக, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலங்கை (TISL) உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை (SCFR/99/2024) தாக்கல் செய்தது. இதில் சுகாதார அமைச்சு, NMRA மற்றும் பிற முக்கிய செயற்பாட்டாளர்கள் உட்பட 66 பிரதிவாதிகள் பெயரிடப்பட்டதுடன், பொறுப்புக்ககூறல் மற்றும் சீர்திருத்தம் கோரப்பட்டது.
கண்டறியப்பட்ட ஊழல்
அவசரநிலை கொள்முதல் விதிகள்> முறையான தர பரிசோதனைகள் இன்றி மருந்துகளை இறக்குமதி செய்ய தவறாகப் பயன்படுத்தப்பட்டன.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA), சில வழங்குநர்கள் வழக்கமான பதிவு மற்றும் பரிசோதனை நடைமுறைகளை தவிர்க்க அனுமதிக்கும் வகையில் பதிவு விலக்குகள் WOR) வழங்கியது.
வழங்குநர்களில் ஒருவரான ஐசோலெஸ் பயோடெக் Isolez Biotech நிறுவனம், செயல்படும் கூறுகள் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாதவாறோ உள்ள தரமற்ற மனித இம்யூனோகுளோபுலினை வழங்கியது. இந்த மருந்துகள் அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டதால்> நோயாளிகள் ஆபத்துக்கு உள்ளாகினர்.
2023 ஆம் ஆண்டில் இதனையொத்த இறக்குமதிகளில் முன்னர் தரக் குறைபாடுகள் இருந்தபோதிலும்> அதே வழங்குநர்களும் அவசரநிலை செயல்முறைகளும் மீண்டும் பயன்படுத்தப்பட்டன; இது அலட்சியத்தையோ அல்லது திட்டமிட்ட புறக்கணிப்பையோ சுட்டிக்காட்டுகிறது.
கொள்முதல் சட்டங்களையும் தரநிலைகளையும் மீண்டும் மீண்டும் பின்பற்றத் தவறுவது> அதிகாரிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டுச் சதி அல்லது ஊழல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக> தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.
விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகள் மூலம் வெளிப்படுத்தப்படும் வரை இவ்வாறான அபாயங்கள் குறித்து பொதுமக்கள் அறியாதவாறு வைக்கப்பட்டனர்; இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு இல்லாமையை காட்டுகிறது.
ஊழலில் சம்பந்தப்பட்ட பணப்பெறுமதி
இந்த பாக்டீரியா தொற்றுள்ள மாற்று மருந்தை உண்மையில் எத்தனை நோயாளிகள் பெற்றனர் என்பது தெளிவில்லாதிருந்தபோதிலும், 2.925 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தின் கீழ் 22,500 குப்பிகள் இறக்குமதி செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இது சுமார் 960 மில்லியன் ரூபாவிற்கு சமமானதாகும். (மூலம்:https://www.ft.lk/opinion/How-bacteria-exposed-a-scandal/14-779758 )
மனித உயிர்கள்> நோயாளி பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை மீதான பரந்த தாக்கம் போன்ற பணமல்லாத செலவுகளை உள்ளடக்குவது முற்றிலும் செல்லுபடியானதும் அவற்றை முன்னிலைப்படுத்துவதும் முக்கியமானதாகும். இத்தகைய மனித மற்றும் அமைப்புசார் செலவுகள் பெரும்பாலும் நிதி இழப்புகளை விட மிக அதிகமானவை; மேலும், இந்தப் பிரச்சினை வெறும் எண்களைத் தாண்டியும் ஏன் முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகின்றன.
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து> ட்ரான்ஸ்பேரன்சி
இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) 2024 ஏப்ரல் மாதத்தில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்தது. இதில் சுகாதார அமைச்சு> NMRA மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளிடம் முழுமையான விசாரணை மற்றும் பொறுப்புணர்வு கோரப்பட்டது. உயர்நீதிமன்றம் மனுவை ஏற்றுக்கொண்டு> 2024 நவம்பர் மாதத்தில் இடைக்கால உத்தரவுகளை வழங்கியது. இதில்> கணக்காய்வுகள் நிறைவு செய்யப்படும் வரை விவாதத்திற்குரிய கொள்முதல் தொடர்பான கொடுப்பனவுகளை நிறுத்தி வைப்பதுடன், மேற்பார்வையை வலுப்படுத்தும் வகையில் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும், சாத்தியமான ஊழல் மற்றும் அலட்சியத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) ஆகியவற்றுக்கு நீதிமன்றம் பணித்தது. அதேவேளை, TISL கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், கொள்கை சீர்திருத்தங்களை முன்னெடுத்தல் மற்றும் இடித்துரைப்போருக்கான (whist
leblowers) வலுவான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்காக தொடர்ந்து முனைப்புடன் பரிந்துரைகளை வழங்கி வருகிறது.
ஊடக அறிக்கைகளும் பொதுக் கலந்துரையாடல்களும் இந்த விடயம் தொடர்பான விழிப்புணர்வை உயர்த்தியுள்ளதுடன், அவசர மருத்துவ கொள்முதல் விதிமுறைகளில் மேம்பாடுகள் தேவை என்ற கோரிக்கைகளையும் உருவாக்கியுள்ளன.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
TISL ஆனது 2024 ஏப்ரல் மாதத்தில் இலங்கை உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை (SCFR/99/2024) தாக்கல் செய்தது.
உயர்நீதிமன்றம், மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதியை வழங்கி 2024 நவம்பர் மாதத்தில் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.
சிக்கலான இம்யூனோகுளோபுலின் கொள்முதல் தொடர்பான கொடுப்பனவுகள், கணக்காய்வுகள் நிறைவு பெறும் வரை முடக்கப்பட்டன.
குற்றப்புலனாய்வு துறை (CID) மற்றும் ஊழல் அல்லது லஞ்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) ஆகியவை, ஆறு மாதங்களுக்குள் தவறான (துர்நடத்தை) செயல்பாடுகளைப் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டன.
TISL மருத்துவ கொள்முதல் செயல்முறைகளில் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி வருகிறது.
ஊடகங்களும், பொதுமக்கள் அழுத்தமும் விழிப்புணர்வை அதிகரித்து, நாடாளுமன்ற விவாதங்களையும் ஊக்குவித்துள்ளன.
தகவல் வெளியிடுவோருக்கான (whistleblowers) வலுவான பாதுகாப்புகள் மற்றும் அவசரநிலை கொள்முதல் மேற்பார்வை குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்:
முழுமையான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்கால துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கும்> பல்வேறு நடவடிக்கைகள் அவசியமாகின்றன. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) போன்ற புலனாய்வு அமைப்புகள்> தங்களது விசாரணைகளை வெளிப்படையாகவும்> துரிதமாகவும் நிறைவு செய்து> அவற்றின் கண்டறிதல்களை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும். அலட்சியம் அல்லது ஊழலுக்கு பொறுப்பானவர்களாக அடையாளம் காணப்படும் அதிகாரிகள் மற்றும் வழங்குநர்களுக்கு எதிராக அரசாங்கம் குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். சுகாதார அமைச்சும் தேசிய மருந்து ஒழுங்குஒழுங்குபடுத்தும் ஆணையகமும் (NMRA) பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்> கட்டாய ஆபத்து மதிப்பீடுகள் மற்றும் சுயாதீன மேற்பார்வை நடைமுறைகளை அறிமுகப்படுத்தி> அவசர மருத்துவ கொள்முதல் கொள்கைகளை அவசரமாக சீர்திருத்த வேண்டும். மேலும்> வழமையான பதிவு மற்றும் கொள்முதல் விதிமுறைகளைத் தவிர்க்க அனுமதிக்கும் விலக்குகளுக்காக நீதித்துறை அல்லது பாராளுமன்ற மறுபரிசீலனை நடைமுறைகளை ஏற்படுத்துவது குறித்து நீதிமன்றங்களும் கொள்கை வகுப்பாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். TISL மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நடைமுறைப்படுத்தல்கள தொடர்ந்து கண்காணித்து> பொதுமக்களை ஈடுபடுத்தி> பழிவாங்கல் அச்சமின்றி தகவல் வெளியிட ஊக்குவிக்கும் தகவல் வெளியிடுவோருக்கான (whistleblowers) பாதுகாப்புகளுக்காக தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இறுதியாக> தவறாக பயன்படுத்தப்பட்ட பொதுநிதிகளை மீட்டெடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்குமான நடைமுறைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
தேவையான மேலதிக நடவடிக்கைகள்:
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) ஆகியவை விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து> அவற்றின் அறிக்கைகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.
பொறுப்புக்கூற வேண்டிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சுகாதார அமைச்சும் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையகமும் NMRA மேலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவசரநிலை மருத்துவ கொள்முதல் கொள்கைகளை சீர்திருத்த வேண்டும்.
பதிவு விலக்குகள் மற்றும் அவசரநிலை கொள்முதல் நடவடிக்கைகளுக்காக நீதித்துறை அல்லது பாராளுமன்ற மறுபரிசீலனை நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
TISL மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இந்த விடயம் தொடர்பான மேற்பார்வையையும் பொதுமக்கள் ஈடுபாட்டையும் தொடர்ந்து பேண வேண்டும்.
ஊழல் மற்றும் முறைகேடுகளை பாதுகாப்பாக அறிவிக்க ஊக்குவிக்கும் வகையில் வலுவான தகவல் வெளியிடுவோர் (whistleblower) பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.
முறைகேடாக பயன்படுத்தப்பட்ட பொதுநிதிகளை மீட்டெடுத்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எதிர்கால துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக நீதிமன்றங்களும் கொள்கை வகுப்பாளர்களும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
இணைப்புகள்
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா
(TISL) நிறுவனம்> 2024 ஆம் ஆண்டில் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய கொள்முதல் நடவடிக்கைகளை விரிவாக ஆவணப்படுத்தி> அதற்கு செயற்பாட்டுடனும் முறையாகவும் பதிலளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான முக்கிய ஆதாரங்களில் TISL வெளியிட்ட உத்தியோகபூர்வ பத்திரிகை அறிக்கைகள் மற்றும் இற்றைப்படுத்தல்கள்> அத்துடன் பிரதான ஊடக நிறுவனங்களின் செய்தி வெளியீடுகள் அடங்குகின்றன. இத்தகைய ஆதாரங்கள்> நிலைமையை ஆராய்வதற்கும்> பொறுப்புணர்வை வலியுறுத்துவதற்கும்> கொள்கை சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் தேவையான அடிப்படைத் தகவல்களையும் பின்னணியையும் வழங்குகின்றன.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா
- TISL மனித இம்யூனோகுளோபுலின் மற்றும் ஏனைய சர்ச்சைக்குரிய மருத்துவப் பொருட்கள் தொடர்பாக அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்தது: https://www.tisrilanka.org/tisl-files-fr-petition-over-human-immunoglobulin-and-other-controversial-medical-supplies/
சண்டே டைம்ஸ்.(21 ஏப்பிரல்> 2024).போலியான இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களின் சர்ச்சைக்குரிய கொள்முதல் தொடர்பாக TISL உயர்நீதிமன்றத்தை நாடியது:
https://www.sundaytimes.lk/240421/news/tisl-goes-to-supreme-court-over-controversial-purchases-of-
medical-supplies-including-counterfeit-
immunoglobulin-554614.html
ஹிரு நிவ்ஸ். (2024): மனித இம்யூனோகுளோ+புலின் சர்ச்சை தொடர்பில் செலவுகளை மீட்டெடுத்தல் மற்றும் நட்டஈடு கோரி அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டது@
https://www.hirunews.lk/en/367742/fr-petition-filed-over-human-immunoglobulin-scandal-for-recovery-of-costs-and-compensation
லங்கா வெப் – இம்யூனோகுளோபுலின் சர்ச்சை: மருத்துவ வழங்கற் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.https://www.lankaweb.com/news/items/2024/03/13/immunoglobulin-scandal-medical-supplies-divisionsdeputy-director-arrested-at-bia/
டெய்லி மிர்ரர் – தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளின் இறக்குமதி: சுகாதார சேவைகளின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டார்;@
https://www.dailymirror.lk/front-page/Import-of- substandard-Immunoglobulin-injections-Former-Deputy-Director-of-Health-Services-arrested/238-274532