சிவில் சமூக செயற்பாடுகளை முடக்குவதற்கான அடக்குமுறைச் சட்டங்கள் – அரச சார்பற்ற அமைப்புகள் (NGO) சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், நிகழ்நிலைக் காப்புச் சட்டம் (OSA)
விவரணம்
2024ஆம் ஆண்டில், இலங்கையில் சிவில் சமூகம், மக்கள் குரல் (activism) மற்றும் சுதந்திரமான கருத்து வெளிப்பாடு ஆகியவற்றிற்கான பொதுவெளி தொடர்ந்து சுருங்கி வருவதைக் காண முடிகிறது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள இணையப் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act), நாடாளுமன்றத்தில் நிலுவையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்பு மசோதா (Anti-Terrorism Bill) மற்றும் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடர்பான வரைவு மசோதா (Draft NGO Bill) ஆகிய சட்ட நடவடிக்கைகள், பொதுமக்கள Translation, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச அவதானிப்பாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு அல்லது டிஜிட்டல் பாதுகாப்பு ஆகியவற்றின் பெயரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள், நாட்டின் நிர்வாகத் துறைக்கும் அரச அதிகாரிகளுக்கும் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன. 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவேற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டமானது, இணைய உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நீக்குவதற்கும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவிற்குப் பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் (PTA) பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவானது, மாற்றுக்கருத்துடையவர்களைக் கைது செய்வதற்கும் அவர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தக்கூடிய வகையிலான தெளிவற்ற, பரந்த வரையறைகளை இன்னும் கொண்டுள்ளது. மேலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடர்பான வரைவு மசோதாவானது, சிவில் சமூக அமைப்புகளின் பதிவு மற்றும் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முயல்வதுடன், அவர்களின் பணிகளில் தன்னிச்சையாகத் தலையிடுவதற்கு அரசிற்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தையும் அளிக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தச் சட்டங்கள் குடிமக்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், அதிகாரத்தில் உள்ளவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதற்குமான ஆற்றலைப் பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.
கண்டறியப்பட்ட ஊழல்
இணையத்தளங்களை தடைசெய்வதற்கும், தெளிவான காரணமின்றி மக்களைக் கைது செய்வதற்கும் அல்லது வெளிப்படைத்தன்மையின்றி அமைப்புகளை மூடிவிடுவதற்கும் சட்டங்கள் அதிகாரிகளுக்கு அனுமதிக்கும்போது, தவறான செயல்களை வெளிக்கொணர்ந்து அறிக்கையிடுவது கடினமாகும். ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பகிரங்க நிதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை வெளிக்கொணர்வதில் சிவில் சமூகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஊடகவியலாளர்கள், இடித்துரைப்பாளர்கள் (Whistleblowers) மற்றும் சமுதாயக் குழுக்கள், ஏதேனும் தவறு நிகழும்போது பெரும்பாலும் குரலெழுப்புகின்றனர். ஆனால், அவர்கள் அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் ஒடுக்கப்படும்போது அல்லது அச்சுறுத்தப்படும்போது, ஊழல் சவாலுக்குட்படுத்தப்படுவதில்லை. இச்சட்டங்கள், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவல்லாமல், அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சனத்திலிருந்து பாதுகாப்பதற்காகத் தேர்ந்தெடுத்து, அரசியல் ரீதியில் பயன்படுத்தப்பட முடியும்.
உதாரணமாக:
பகிரங்க ஒப்பந்தமொன்றிலுள்ள ஒழுங்கீனங்களை வெளிப்படுத்தும் இணையப் பதிவொன்று> “பொய்யானது அல்லது தீங்கு விளைவிக்கக்கூடியது” எனக் கூறி அகற்றப்பட முடியும்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் கீழ்> அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர் ஒருவர் “அச்சுறுத்தல்” என முத்திரை குத்தப்பட முடியும்.
கொள்முதல் மோசடிகளைப் (Procurement fraud) புலனாய்வு செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (NGO) ஒன்று> புதிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சட்டமூலத்தின் கீழ் அதன் பதிவை இழக்க நேரிடலாம்.
ஊழலில் சம்பந்தப்பட்ட பணப்பெறுமதி
ஏற்புடையதல்ல
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
ஆன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஆகியன அரசியலமைப்பு உரிமைகளையும் சர்வதேச மனித உரிமைத் தரங்களையும் எவ்வாறு மீறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) சட்டப் பகுப்பாய்வுகளை வெளியிட்டது. இச்சட்டமூலங்களில் காணப்படக்கூடிய தெளிவற்ற வரையறைகள், மிதமிஞ்சிய அதிகாரங்கள் மற்றும் சமநிலை பேணலுக்கான சமநிலை சமநிசரிபார்ப்புக் கட்டமைப்புகள் (checks and balances) இல்லாமை ஆகியன குறித்து இவை விளக்கமளித்திருந்தன
TISL ஆனது> இரு சட்டமூலங்கள் பற்றியும் இயைபான பாராளுமன்றக் குழுக்களுக்கு எழுத்திலான கருத்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது. இச்சமர்ப்பிப்புகள் சிவில் சமூகம் மற்றும் தனிநபர் சுதந்திரங்களுக்கான ஆபத்துகளைச் சுட்டிக்காட்டியதுடன்> குறிப்பிடத்தக்க திருத்தங்களை அல்லது முழுமையான மீளப்பெறுகையைக் கோரின
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், 125 இற்கு மேற்பட்ட சிவில் சமூகத் தலைவர்களும் 30 இற்கு மேற்பட்ட அமைப்புகளும், நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீளப்பெறுமாறு கோரி பொதுக் கூட்டு அறிக்கை ஒன்றில் கையொப்பமிட்டனர்: https://www.ft.lk/opinion/Online-Safety-Bill-and-Anti-Terror-Bill-law-making-to-end-democracy-and-fundamental-rights/14-754373
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான (NGO) செயலகத்தினால் பகிரப்பட்ட வரைவு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சட்டமூலம், கருத்துத் தெரிவிப்பதற்காக வெறுமனே 3 வார கால அவகாசத்துடன் ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கப்பட்டிருந்தபோதிலும், சிவில் சமூக அமைப்புகள் அதற்கு முறைப்படி தங்களது பதிலளிப்புகளை: https://groundviews.org/2024/05/14/government-proposes-a-law-
to-control-ngo-activity/
சீர்கெட்டு வரும் சிவில் சமூக வெளி (Civic Space), வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் பங்களிப்பு ஆகியவற்றில் உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமைக்கு எதிரான ஒரு கூட்டுப் பதிலளிப்பாக, பல சிவில் சமூக அமைப்புகள் இலங்கையின் திறந்த அரசாங்கப் பங்காண்மை (OGP) செயன்முறையிலிருந்து விலகின. இந்த விலகலானது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் கூட்டு உருவாக்கம் போன்ற OGP இன் முக்கிய கோட்பாடுகளைப் பேணிப் பாதுகாப்பதில் அரசாங்கம் தவறியமைக்கு எதிரான ஒரு வலுவான கண்டனமாக அமைந்ததுடன், நாட்டில் சுதந்திரமான சிவில் சமூக ஈடுபாட்டிற்கான வழிவகைகள் சுருங்கி வருவது குறித்து சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் வளர்ந்து வரும் பெரும் கவலையையும் பிரதிபலித்தது. (மூலம்: திறந்த அரசாங்கப் பங்காண்மை செயன்முறையிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் விலகல்): https://www.ft.lk/front-page/CSOs-withdraw-from-Open-Government-Partnership-process/44-758265
TISL ஆனது, 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி (நீதிமன்றத்தில்) மனுவொன்றைத் தாக்கல் செய்தது
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்
இச்சட்டங்களின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையைச் சவாலுக்குட்படுத்துவதற்கு> அடிப்படை உரிமை மனுக்கள் (FR Petitions) மற்றும் ஏனைய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் அல்லது அவற்றுக்கு ஆதரவளித்தல். TISL ஏற்கனவே நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இச்சட்டங்கள் எவ்வாறு சாதாரண பிரஜைகளைப் பாதிக்கின்றன என்பதை> முக்கியமாக நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மற்றும் கள ஆய்வுகள் (Case studies) மூலம் விளக்குவதற்குச் சமூக ஊடகங்கள்> பொது அரங்குகள் மற்றும் அடிமட்ட அளவிலான மக்கள் ஈடுபாடுகளைப் பயன்படுத்துதல்.
மாற்றுக் கருத்துடையோரை ஒடுக்குவதற்கும், சட்டபூர்வமான இணைய உள்ளடக்கங்களை நீக்குவதற்கும் அல்லது சிவில் சமூகக் குழுக்களுக்குத் தொந்தரவு செய்வதற்கும் இச்சட்டங்கள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களைக் கண்காணித்து அறிக்கையிடுதல். இதற்கென பொதுமக்கள் அணுகக்கூடிய வகையிலான சம்பவக் கண்காணிப்புக் கருவி (Incident tracker) ஒன்றை உருவாக்க முடியும்.
ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கு, ஏனைய சிவில் சமூக அமைப்புகள், ஊடகங்கள், சட்டத்தரணிகள் மற்றும் செயல்பாட்டாளர்களுடன் பலமான வலையமைப்புகள் மற்றும் கூட்டணிகளை உருவாக்குதல்.
இணைப்புகள்
நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் (Online Safety Bill) குறித்த TISL இன் அறிக்கை> சிவில் சமூகத்தின் சுதந்திரம் மீதான கவலைகளை எடுத்துக்கூறுவதுடன்> பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் சட்ட ரீதியான சவால்களை முன்னெடுப்பது பற்றியும் பரிந்துரைக்கின்றது: https://www.ft.lk/opinion/Online-Safety-Bill-and-Anti-Terror-Bill-law-making-to-end-democracy-and-fundamental-rights/14-754373
சிவில் சமூகத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் மேற்பார்வை அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, புதிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGO) சட்டம் குறித்த அரசாங்கத்தின் முன்மொழிவு பற்றிக் கலந்தாலோசிக்கப்பட்டது: https://groundviews.org/2024/05/14/governmentpropose
s-a-law-to-control-ngo-activity/
Eu SEE (ஏப்பிரல் 2024) https://eusee.hivos.org/alert/draft-ngo-law-reinforces-political-oversight-on-ngos/
மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஜனவரி 2024) – கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கின்ற நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் (OSA) தெளிவற்ற ஏற்பாடுகள் குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது
https://freedomhouse.org/country/sri-lanka/freedom-net/2024
அக்சஸ் நவ் (Access Now) – ஜனவரி 2024: நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை (OSA) மீளப்பெறுமாறும், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் (Stakeholders) அர்த்தமுள்ள கலந்தாலோசனைகளை நடத்துமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது:
https://www.accessnow.org/press-release/open-letter-sri-lanka-must-withdraw-online-safety-bill/