மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) 5 ஊழியர்கள் மற்றும் ஏனைய இருவரினால் வாகனங்கள் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்படுதல்.
விவரணம்
இலங்கையில் வாகனப் பதிவு மோசடியில் ஈடுபட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) ஐந்து ஊழியர்களுக்கும் ஏனைய இருவருக்கும் எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது இறக்குமதி செய்யப்பட்ட 400 வாகனங்களுக்குச் சுங்க அனுமதி பெறுவதற்கு முன்னர் அவற்றை மோசடியாகப் பதிவு செய்ததற்காக இந்த ஏழு தனிநபர்களுக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரம்பத்தில்> தேசிய கணக்காய்வு அலுவலகம்> 2023 செப்டம்பர் மாதத்தில் இடம்பெற்ற இம்மோசடியான பதிவுகள் சம்பந்தமாக விசேட கணக்காய்வு அறிக்கையொன்றை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து> முறையான சுங்க அனுமதியின்றி சுமார் 400 வாகனங்களுக்கு அதிகாரமளிக்கப்படாத பதிவுகளை மேற்கொண்ட குற்றத்திற்காக> மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) ஐந்து ஊழியர்கள் உட்பட 7 தனிநபர்களுக்கு எதிராக CIABOC சட்ட வழக்குத் தாக்கல் செய்தது.
2009 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க மோட்டார் போக்குவரத்து (திருத்தச்) சட்டத்திற்கு இணங்க> வாகனமொன்று விதித்துரைக்கப்பட்ட பாதுகாப்புத் தரங்களுடன் இணங்குவதற்குத் தவறினால்> சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தால்> அல்லது போலி ஆவணங்களுடன் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால்> அதன் பதிவை மறுப்பதற்கான அதிகாரம் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு உண்டு. எவ்வாறாயினும்> குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்கள் இவ்விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு> வாகனங்களைச் சட்டவிரோதமாகப் பதிவு செய்துள்ளனர்.
2024 பெப்ரவரி நிலவரப்படி> CIABOC ஆனது 400 வாகனங்களில் 156 வாகனங்கள் குறித்த குறிப்பிட்ட விபரங்களை வெளிக்கொணர்ந்தது; அவற்றில் பெரும்பாலானவை சொகுசு வாகனங்களாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. அத்தோடு, தற்போதைய உரிமையாளர்களிடமிருந்து ஏழு வாகனங்களைக் கைப்பற்றி> அவற்றை இலங்கைச் சுங்கத் திணைக்களத்திடம் கையளிப்பதற்கான நீதிமன்ற உத்தரவுகளையும் ஆணைக்குழு பெற்றது.
கண்டறியப்பட்ட ஊழல்
DMT ஊழியர்கள், அவசியமான சுங்க அனுமதியின்றி வாகனங்களைப் பதிவு செய்துள்ளனர்; இது 2009 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க மோட்டார் போக்குவரத்து (திருத்தச்) சட்டத்தை மீறும் செயலாகும். அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு (Standards) இணங்காத அல்லது முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களைப் பதிவு செய்வதை இச்சட்டம் திட்டவட்டமாகத் தடை செய்கின்றது.
இச்சட்டவிரோதப் பதிவுகள் காரணமாக, அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி அரசிறையில் கணிசமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இப்பதிவுச் செயன்முறையைத் தவறாகப் பயன்படுத்தியமையால், சேகரிக்கப்பட்டிருக்க வேண்டிய சுங்கத் தீர்வைகள் மற்றும் வரிகள் மூலமாகக் கிடைத்திருக்கக் கூடிய மில்லியன் கணக்கான ரூபா வருமானம் அரசாங்கத்திற்கு இழக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் சில சொகுசு வாகனங்களாகும் மேலும்> இம்மோசடியான செயல்பாடுகளில்> சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அல்லது சேர்த்துப் பொருத்தப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்வதற்கு ஏதுவாக> அவற்றின் அடிச்சட்ட மற்றும் இயந்திர இலக்கங்களை மாற்றுவதும் உள்ளடங்கியிருந்தது. இவ்வாறான முறைகேடான கையாளுதல்கள் மூலம் போலியான மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மோசடிப் பதிவுகள் சுங்க ஒழுங்குமுறைகளைத் தவிர்த்தது மட்டுமன்றி> சட்டபூர்வமான வாகன இறக்குமதிகள் மற்றும் பதிவுகள் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைத்திருக்கக்கூடிய வரி அரசிறையையும் இழக்கச் செய்துள்ளன.
இவ்வாகனங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய சுங்கத் தீர்வைகள் மற்றும் வரிகள் செலுத்தப்படாததன் காரணமாக> இச்சட்டவிரோதப் பதிவுகள் அரசாங்கத்திற்கு சுமார் 3 பில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஊழலில் சம்பந்தப்பட்ட பணப்பெறுமதி
முறையான சுங்க அனுமதி (Customs clearance) பெறப்படாமல் சுமார் 400 வாகனங்கள் மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை> இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாகனங்களில் பெரும்பாலானவை மிக அதிகளவிலான இறக்குமதித் தீர்வைகள் மற்றும் வரிகளைக் கொண்ட சொகுசு வாகனங்களாகும். இவை சில சந்தர்ப்பங்களில் அவற்றின் CIF பெறுமதியின் (CIF Value) 300% வரை அமையக்கூடியவை ஆகும். CIABOC இன் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, “இச்சட்டவிரோதப் பதிவானது அரசாங்கத்திற்கு 3000 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (மூலம்:Causing financial loss to the government by fraudulent registration of unclearedvehicles)
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
அதிகாரமளிக்கப்படாத வாகனப் பதிவுகளில் ஈடுபட்டமைக்காக, அந்த ஏழு தனிநபர்களுக்கும் எதிராக CIABOC முறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
வாகனங்களைக் கைப்பற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவுகள் (Court orders).
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்
அரசாங்கமும் ஒழுங்குமுறை அதிகாரசபைகளும்:
அதிகாரமளிக்கப்படாத பதிவுகளைத் தடுப்பதற்காக, இலங்கைச் சுங்கத் திணைக்களத்துடன் நேரடியாக இணைக்கப்பட்ட தானியங்கு (Automated) மற்றும் வெளிப்படையான இலத்திரனியல் பதிவு முறைமைகளை (Digital registration systems) அறிமுகப்படுத்துவதன் மூலம், மோட்டார் திணைக்களத்தினுள் (DMT) மேற்பார்வைப் பொறிமுறைகளைப் பலப்படுத்துதல்.
மோட்டார் போக்குவரத்துத் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் தரவுகளுக்கிடையே வழக்கமான முறையில் குறுக்குச் சரிபார்ப்புகளை (Cross-checks) மேற்கொள்வது உட்பட, ஒழுங்கீனங்களை முன்கூட்டியே கண்டறிவதற்குக் கண்டிப்பான உள்ளக கணக்காய்வு மற்றும் ஒழுங்குமுறை இணக்கப்பாட்டுச் (Compliance) செயன்முறைகளை அமுலாக்குதல்.
ஊழலுக்கு எதிராகப் பூச்சிய சகிப்புத்தன்மை (Zero tolerance) பேணப்படுவதை நிரூபிக்கும் வகையில், மோசடியான வாகனப் பதிவுகளில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களுக்கும் (Intermediaries) எதிராகக் கடுமையான முறையில் குற்றவியல் வழக்குத் தொடுத்தல்.
பிரஜைகளும், ஊடகங்களும்:
வாகனப் பதிவுகள் மற்றும் அவை தொடர்பான அரசாங்கத்தின் வருமானம் (Revenue) குறித்த தரவுகளைக் கோருவதற்கு, தகவலுக்கான உரிமைச் (RTI) சட்டத்தைப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மையைக் கோரலாம்.
பதிவு செய்யப்படாத விற்பனையாளர்கள் (Unregistered dealers) அல்லது வழக்கத்திற்கு மாறான அதிவிரைவான பதிவுகள் போன்ற சந்தேகத்திற்கிடமான நடைமுறைகளை, இடித்துரைப்பாளர் வழிகள் (Whistleblowing channels) மூலம் அறிக்கையிடலாம்.
அதிகாரம் மற்றும் பொது நிதிகள் (Public funds) தவறாகப் பயன்படுத்தப்படுவதை விசாரணை செய்யும் சுயாதீனப் பத்திரிகைத் துறைக்கு ஆதரவளிக்கலாம்.
இணைப்புகள்
https://www.dailynews.lk/2024/02/12/admin-catagories/
breaking-news/393362/seven-in-vehicle-registering-scam-
indicted/#google_vignette
https://www.onlanka.com/news/ciaboc-takes-legal-action-against-dmt-employees-for-unlawful-vehicle-registrations.html
https://www.themorning.lk/articles/m2Dqeor0CawWMns2yYGK
https://www.themorning.lk/articles/V3FWyDfhIX0WKUDM8ICy
https://www.dailymirror.lk/breaking-news/Legal-action-taken-against-Motor-Traffic-Department-staff-for-fraudulent- vehicle-registration/108-276771
https://www.themorning.lk/articles/Y7YMnk8xf30fclX3s1Iw
https://www.themorning.lk/articles/m2Dqeor0CawWMns2yYGK
https://ciaboc.gov.lk/media-centre/latest-news/1215-causing-financial-loss-to-the-government-by-fraudulent-registration-of-uncleared-vehicles