சீனி இறக்குமதியின் ஊழல்

இழப்பு எவ்வளவு:

15.9 பில்லியன் ரூபா [i]

விளக்கம்:

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக அரசாங்கம் 2020 மே மாதம் சீனியின் இறக்குமதிக்கான விசேட வியாபார பண்ட அறவீட்டினை கிலோ ஒன்றிக்கு 35 ரூபாயிலிருந்து 50 ரூபாவுக்கு உயர்த்தியது. பின்னர் 2020 அக்டோபர் மாதம் 14 ஆம் திகதியன்று ஒரு கிலோ சீனிக்கான வரியானது 50 ரூபாயிலிருந்து 25 சதத்திற்கு (0.25) குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீனிக்கான சில்லறை விலையினை குறைக்க முடியாது என அரசாங்கம் அறிவித்தது. அதன்பின்னர், அதே மாதம் 27 ஆம் திகதி அரசாங்கம் மீண்டும் சீனிக்கான வரியினை கிலோ ஒன்றிக்கு 40 ரூபாவாக உயர்த்தியது. எவ்வாறாயினும், இலங்கையின் விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் படி அதிகரிக்கப்பட்ட வரியானது ஒரு மாதத்திற்கு பின்னரே அமுலுக்கு வர முடியும். ஆகவே, திருத்தப்பட்ட வரி விகிதமானது அக்டோபர் 13 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நடைமுறைக்கு வர முடியாது. [ii]

இலங்கையில் சீனிக்கான சந்தை கட்டமைப்பானது ஏகபோக கட்டமைப்பாக காணப்படுகிறது. நள்ளிரவில் திடீர் என ஓர் வரி விகித மாற்றத்துடன் வர்த்தமானி வெளியிடப்படுவதற்கு சற்று முன் நாட்டின் முக்கிய சீனி இறக்குமதி நிறுவனங்களில் ஒன்றான Pyramid Wilmar எனும் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் பெரிய அளவிலான சீனி இறக்குமதியினை மேற்கொண்டு தமது சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்துவிட்டு வரியானது 0.25 ரூபாவுக்கு குறைவடைந்ததும் தமது வரியினை செலுத்தி சீனியினை விநியோகிக்க தொடங்கியது. இந்த காலப்பகுதிக்குள், குறித்த வரி குறைப்பை பயன்படுத்தி இந்த நிறுவனம் 125,000 மெட்ரிக் டொன் சீனியினை இறக்குமதி செய்தது. அதனடிப்படையில், 2020 அக்டோபர் மாதம் தொடக்கம் 2021 பெப்ரவரி மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த சீனியின் அளவில் 39% அளவினை குறித்த நிறுவனம் இறக்குமதி செய்திருப்பதாகவும் இந்த செயற்பாடு காரணாமாக திறைசேரிக்கு சுமார் 15.9 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும் பொது கணக்குகளுக்கான பாராளுமன்ற குழுவின் (COPA) உறுப்பினர்களில் ஒருவருமான ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார். [iii]

குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் அரச நிறுவனமான சதொச நிறுவனம் 2000 மெட்ரிக் டொன் இற்கும் மேற்பட்ட சீனியினை 0.25 ரூபா வரி செலுத்தி இறக்குமதி செய்த அதே நிறுவனத்திடமிருந்து 125 – 127 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளது.[iv] இந்த சம்பவம் தொடர்பில் முறையாக கணக்கு மீளாய்வு செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கும் COPA குழுவிற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் தற்போது நடைபெறும் கணக்கு மீளாய்வு தொடர்பாக போதிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதில் இடம்பெற்றுள்ள ஊழல் என்ன?

குறிப்பிட்ட ஒருசிலரின் நலனுக்காக இறக்குமதி வரிகள் மற்றும் விலை மாற்றங்கள் ஏற்படுத்தி “ஒரே இரவில் வர்த்தமானிகள் வெளியிடல்” நடைமுறையானது “அரசினை கைப்பற்றலுக்கான” அறிகுறியாக காணப்படலாம். [v]

அரசினை கைப்பற்றல்: சக்திவாய்ந்த நபர்கள், நிறுவனங்கள் அல்லது குழுக்கள் ஒரு நாட்டிற்குள் அல்லது அதற்கு வெளியே ஊழலைப் பயன்படுத்தி அந்த நாட்டின் கொள்கைகள், சட்டச் சூழ்நிலைகள் மற்றும் பொருளாதாரம் என்பவற்றை தங்கள் தனிப்பட்ட நலன்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைத்தல். [vi]

பாதிக்கப்பட்டவர்கள் யார்?

  • பொதுமக்கள், நாட்டின் முக்கிய தேவைகள் மற்றும் அபிவிருத்திகளை நிவர்த்தி செய்யக்கூடிய வருவாய் இழப்பு.
  • ஏனைய சீனி இறக்குமதியாளர்கள், ஓர் இறக்குமதியாளருக்கு முறையற்ற நன்மை/பயன்

இதுவரை நடந்த விடயங்கள் என்ன?

  • 9 பில்லியன் வரி வருவாய் இழப்பினை ஏற்படுத்தியதாக கூறப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட சட்டமா அதிபர் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு JVP கட்சியானது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஓர் முறைப்பாட்டினை தாக்கல் செய்தது. [vii]
  • குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஓர் முறைப்பாட்டினை JVP கட்சி தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. [viii]
  • பொது நிதிக்கான குழுவானது (COPE) சீனி இறக்குமதி தொடர்பான ஊழல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் குறித்த அறிக்கையானது பொதுவில் கிடைக்கவில்லை.[ix]

என்ன செய்ய முடியும்?

  • COPF அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையினை பொதுவில் அணுகுவதற்கான வசதியினை கோரல்.
  • நள்ளிரவில் அரச வர்த்தமானி வெளியிடும் நடைமுறையினை மாற்றி ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தல். [x]
  • இப்பிரச்சினை தொடர்பில் பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல், அதனடிப்படையில் அரச செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தேவை அதிகரிக்கப்படல்

 

[UPDATE] –  2022 ஏப்ரல் மாதம் பதிவான அறிக்கையின் படி, இறக்குமதி செய்யப்பட்ட சீனி மீதான வரி குறைப்பு/ விலக்கு மூலம் எமது நாடு இழந்த வரி வருமானத்தினை மீட்டெடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் பரிந்துரைத்துள்ளது. வரி குறைப்பு காரணமாக பெருமளவு இலாபமீட்டிய இறக்குமதியாளர்களிடமிருந்தே எமது நாடு இழந்த வருவாய் மீட்டெடுக்கப்பட வேண்டும் என குறித்த அலுவலகத்தின் அறிக்கை மேலும் பரிந்துரைக்கிறது.

Source – https://www.newsfirst.lk/2022/04/17/sugar-tax-scam-recover-loss-of-rs-16b-from-importer-audit-office/

________________________________________________________________________________

[i] https://www.newsfirst.lk/2021/03/09/sugar-scam-cost-the-state-rs-15-9-bn-in-taxes/

[ii] https://www.youtube.com/watch?v=gXqf6jTFaDg

[iii] https://www.newsfirst.lk/2021/03/09/sugar-scam-cost-the-state-rs-15-9-bn-in-taxes/

[iv] https://www.newsfirst.lk/2021/03/10/ruling-party-calls-for-forensic-audit-on-sugar-scam/

[v] https://www.facebook.com/tisrilanka/posts/2988419108067347

[vi] https://www.transparency.org/en/publications/the-anti-corruption-plain-language-guide

[vii] https://economynext.com/jvp-files-fr-petition-against-sugar-scam-79719/

[viii] https://www.newsfirst.lk/2021/03/08/what-happened-to-the-sugar-scam/

[ix] https://economynext.com/sri-lanka-sugar-scam-from-midnight-gazette-parliament-committee-calls-for-probe-77669/#modal-one

[x] https://www.advocata.org/commentary-archives/tag/Sri+Lanka+Sugar