நுண்நிதி (சட்டமூலம்)

விவரணம்

நுண்நிதிச் சட்டமூலமானது> பொதுவாக பாரம்பரிய வங்கிச் சேவைகளை அணுக முடியாத குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் சிறிய கடன்கள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதை உள்ளடக்கிய இலங்கையின் நுண்நிதித் துறையை ஒழுங்குபடுத்துவதை இலக்காகக் கொண்ட ஒரு முன்மொழியப்பட்ட சட்டவாக்கமாகும். இந்தச் சட்டமூலமானது> நுண்நிதி நிறுவனங்களை (MFIs) மேற்பார்வை செய்வதற்கான ஒரு முறைசார்ந்த ஒழுங்கு முறைவடிவமைப்பை (Regulatory framework) நிறுவுவதற்கும்> வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும்> கடன் பெறுநர்களைச் சுரண்டல்களிலிருந்து பாதுகாப்பதற்கும் மற்றும் இத்துறையின நிலைபேறான வளர்ச்சியை உறுதிசெய்வதற்கும் முனைகிறது. இது உரிமத் தேவைகள்> வட்டி வீத உச்ச வரம்புகள்> கடன் பெறுநர் பாதுகாப்புப் பொறிமுறைகள் மற்றும் பிணக்கு தீர்க்கும் செயன்முறைகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. நுண்நிதித் துறையானது மிக வேகமாக விரிவடைந்துள்ள பின்னணியில் இச்சட்டவாக்கம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது; எனினும்> இத்துறை தன்னிச்சையான மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத நடைமுறைகளுக்கு ஆளாகியுள்ளதால்> சூறையாடும் நோக்குடனான கடன் வழங்கல்கள்> மிகையான வட்டி வீதங்கள் மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை இன்மை குறித்த பெரும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கண்டறியப்பட்ட ஊழல்

நுண்நிதித் துறையில் இடம்பெறும் ஊழல்களும் முறைகேடுகளும் பின்வருவன உட்பட பல்வேறு வடிவங்களில் பதிவாகியுள்ளன:

கடன்பெறுநர்களைக் கடன் சுழற்சிகளுக்குள் சிக்கவைக்கும் அதியுயர் வட்டி வீதங்களைக் கொண்ட> சூறையாடும் நோக்குடனான கடன் வழங்கல் நடைமுறைகள்.

கடன் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை இன்மை. ஒழுங்குமுறை சார்ந்த நுணுக்கமான கண்காணிப்புகளைத் தவிர்ப்பதற்காக> நுண்நிதி வழங்குநர்களுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெறும் கூட்டுச்சதிகள்.

சமூக மேம்பாடு அல்லது வறுமை ஒழிப்பிற்கென ஒதுக்கப்பட்ட நிதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது கையாடல் செய்தல்.

அரசியல் தலையீடுகள் அல்லது வளப் பற்றாக்குறை காரணமாக, ஒழுங்குமுறை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் பயனற்ற மேற்பார்வை மற்றும் சட்ட அமுலாக்கங்கள்.

இவ்வாறான ஊழல்மிக்க நடைமுறைகள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய கடன்பெறுநர்களுக்குக் கடுமையான நிதிசார் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதுடன்> பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து> இத்துறையின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட சமூகத் தாக்கத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.

ஊழலில் சம்பந்தப்பட்ட பணப்பெறுமதி

ஏற்புடையதல்ல

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்:

இத்துறைக்கு முறைசார்ந்த ஒழுங்குமுறைகளையும் மேற்பார்வைகளையும் அறிமுகப்படுத்துவதற்காக> நுண்நிதிச் சட்டமூலத்தை வரைவு செய்யும் பணியை அரசாங்கம் முன்னெடுத்தது.

இச்சட்டமூலம் குறித்த கருத்துக்களைச் சேகரிப்பதற்காக> ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா> உட்பட நுண்நிதி நிறுவனங்கள்> நுகர்வோர் குழுக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஆகிய சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் கலந்தாலோசனைகள் நடத்தியுள்ளன.

வரைவுச் சட்டவாக்கத்தில் கடன்பெறுநர் பாதுகாப்பு> வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறும்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை TISL மற்றும் ஏனைய சிவில் சமூகக் குழுக்கள் முனைப்புடன் வழங்கியுள்ளன.

கடன்பெறுநர்களின் உரிமைகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கல்களிலுள்ள ஆபத்துகள் குறித்து அவர்களுக்கு அறிவூட்டுவதற்கான விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடத்தப்பட்டுள்ளன.

முறைசார்ந்த ஒழுங்குமுறைகள் சட்டமாக்கப்படும் வரை> சில நுண்நிதி நிறுவனங்கள் சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளுக்கு  இணங்க> தமக்கான நடத்தைக் கோவைகளைத்  தன்னிச்சையாக ஏற்றுக்கொண்டுள்ளன.

மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

ஒழுங்குமுறைகள் மற்றும் மேற்பார்வைகளுக்கான ஒரு தெளிவான சட்டப் பொறிமுறையை  வழங்குவதற்காக> நாடாளுமன்றத்தில் நுண்நிதிச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதனைத் துரிதப்படுத்துதல்.

சட்டபூர்வ இணக்கப்பாடுகளை பயனுள்ள முறையில் அKலாக்குவதற்கு> நுண்நிதித் துறையை மேற்பார்வை செய்யும் ஒழுங்குமுறை அதிகாரசபையின் சுயாதீனத்தன்மையையும் அதன் ஆற்றலையும் பலப்படுத்துதல்.

சூறையாடும் நோக்குடனான கடன் வழங்கல்களைத் தடுப்பதற்கும்> கடன்பெறுநர்கள் இலகுவாகக் கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய தன்மையை உறுதிப்படுத்துவதற்கும்> வட்டி வீதங்கள் மற்றும் கட்டணங்கள் மீது கண்டிப்பான உச்சவரம்புகளை நிறுவுதல்

கடன்பெறுநர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில்> கடன் நிபந்தனைகள்> விதிமுறைகள் மற்றும் அவற்றிலுள்ள ஆபத்துகளைத் தெளிவான> எளிய மொழியில் முழுமையாக வெளிப்படுத்துவதைக் கட்டாயமாக்குதல்.

கடன்பெறுநர்களின் முறைப்பாடுகளை வினைத்திறனான முறையில் தீர்ப்பதற்கு> வலுவான குறைதீர்ப்புப் பொறிமுறைகளை  நடைமுறைப்படுத்துதல்.

கணக்காய்வுகள் மற்றும் நிதிசார் வெளிப்படுத்தல்கள் உட்பட> நுண்நிதி நிறுவனங்களுக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கான அறிக்கையிடல் தேவைகளை அதிகரித்தல்.

தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு கடன்பெறுநர்களுக்கு வலுவூட்டும் வகையில்> நிதிசார் அறிவுத்திறன் நிகழ்ச்சித்திட்டங்களை  மேம்படுத்துதல்.

கூட்டுச்சதி மற்றும் நிதிக் கையாடல் உள்ளிட்ட ஊழல் நடைமுறைகளுக்கு எதிராக> அபராதங்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை கடுமையான முறையில் அமுலாக்குதல்.

நுண்நிதிச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கும்> கடன்பெறுநர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துப் பரிந்துரைப்பதற்கும் சிவில் சமூகத்தையும் ஊடகங்களையும் ஊக்குவித்தல்.

இணைப்புகள்

TISL நிறுவனம்> கடன்பெறுநர் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான அறிக்கைகள் மற்றும் இற்றைப்படுத்தல்களை (Updates) வெளியிட்டு> நுண்நிதித் துறையில் ஒழுங்கு முறைப்படுத்தல் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காகத் தொடர்ச்சியாக முனைப்புடன் குரல்கொடுத்து வருகின்றது: https://www.tisrilanka.org/?s=microfinance

இலங்கையில் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பை விவரித்து> நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நுண்நிதிச் சட்டமூலத்தின் உத்தியோகபூர்வ வரைவு: https://parliament.lk/uploads/acts/gbills/english/6378.pdf

இந்தக் கட்டுரை> ஒழுங்குமுறைப்படுத்தப்படாத கடன் வழங்கல் நடைமுறைகள் காரணமாகக் கடன்பெறுநர்கள் எதிர்நோக்கும் ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்வதுடன்>எளிதில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்கான அவசரச் சட்ட நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

https://www.sundaytimes.lk/230415/business-times/

challenges-in-sri-lankas-microfinance-sector-508469.html

இலங்கையின் நுண்நிதித் துறையின் நிலைமை குறித்த உலக வங்கியின் விரிவான அறிக்கை; இதில் சவால்கள்> ஒழுங்குமுறை இடைவெளிகள் மற்றும் இத்துறையின் இத்துறையின் நிலைபேறான  வளர்ச்சிக்கான பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன:https://documents.worldbank.org/en/publication/documents-reports/documentdetail/0998570b08467ec1e99b0383a1c737e4d2

 

 

This website uses cookies to improve your web experience.