KPMG நிறுவனத்தினால் நடத்தப்பட்ட தடயவியல் கணக்காய்வின்படி, இலங்கையில் மில்லியன் கணக்கான எரிபொருள் விற்பனைப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன
விவரணம்
இலங்கையிலுள்ள இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் (CPSTL), KPMG நிறுவனம் நடத்திய தடயவியல் கணக்காய்வானது (Forensic audit), 2010 ஆம் ஆண்டு முதல் SAP தரவு முறைமையில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் மாற்றப்பட்டமை அல்லது நீக்கப்பட்டமை உள்ளிட்ட பாரிய முறைகேடுகளை வெளிக் கொணர்ந்துள்ளது. இத்திரிபுபடுத்தல்களில் பெரும்பாலானவை 2022 ஆம் ஆண்டின் எரிபொருள் நெருக்கடியின் போது நிகழ்ந்துள்ளன;. இது எரிபொருள் விநியோகத்தின் நம்பகத்தன்மை (Integrity) குறித்த கடுமையான கரிசனைகளை எழுப்பியுள்ளது. இக்கணக்காய்வு> 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 28 பில்லியன் ரூபா மதிப்பிலான பாரிய இருப்பு இழப்புகளை வெளிப்படுத்தியிருந்தது; இவ்விழப்புகள் குறித்து கணக்காய்வு முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர்> 2023 ஆம் ஆண்டில் இவ்விழப்பு 4 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டது. மேலும்> காலாவதியான நடைமுறைகளும் போதியளவற்ற தரவு நிர்வாகமும் (Data management) இவ்வொவ்வாமைகளுக்குக் (Discrepancies) காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன
கண்டறியப்பட்ட ஊழல்
எரிபொருள் விநியோக முறைமையைச் சுற்றியுள்ள முறைகேடான கையாளுதல்களும் சட்டவிரோதச் செயல்பாடுகளும் (பொதுமக்களைப் பாரதூரமான இன்னல்களுக்கு இட்டுச்சென்ற ஒரு தேசியப் பற்றாக்குறைக்கு மத்தியில்> அதிகாரமளிக்கப்படாத எரிபொருள் விற்பனை போன்ற சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு இவ்வாறான முறைகேடான கையாளுதல்கள் வழிவகுத்தன.
ஊழலில் சம்பந்தப்பட்ட பணப்பெறுமதி
ஊழலில் சம்பந்தப்பட்ட பணப் பெறுமதி
இக்கணக்காய்வானது> 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 28 பில்லியன் ரூபா மதிப்பிலான பாரிய இருப்பு இழப்புகளை வெளிப்படுத்தியிருந்தது; இவ்விழப்புகள் குறித்து கணக்காய்வு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் பின்னர்> 2023 ஆம் ஆண்டில் இவ்விழப்பு 4 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
குற்றப் புலனாய்வுத் திணைக்களமானது (CID), CPSTL இல் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடான தரவுக் கையாளுதல்கள் (Data manipulation) மற்றும் இருப்பு இழப்புகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஒரு தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இக்கணக்காய்வின் போது, கணக்காய்வுச் செயன்முறை நடந்துகொண்டிருந்த காலப்பகுதியிலேயே தரவுகள் அழிக்கப்பட்ட ஒரு சம்பவம் உட்பட> தரவு நீக்கத்திற்கான கணிசமான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டன.
அதிகாரமளிக்கப்படாத தரவு நீக்கத்தில் சம்பந்தப்பட்ட தனியார் கணக்காய்வு நிறுவனத்தைச் (Private audit firm) சேர்ந்த நபர் ஒருவர்> நடைபெற்று வரும் தடயவியல் பகுப்பாய்விலிருந்து (Forensic analysis) நீக்கப்பட்டுள்ளார். தரவு நீக்கம் குறித்த “நியாயமான சந்தேகத்தை” CPSTL ஒப்புக்கொண்டதுடன்> இந் நபர் CPSTL இன் ஊழியர் அல்ல என்பதை வலியுறுத்தி> அந்தத் தரவு நீக்கமானது ஒரு தொலைநிலை உள்நுழைவு முறைமை (Remote login system) மூலம் நிகழ்ந்ததையும் உறுதிப்படுத்தியது.
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்
நிகழ்நேர கண்காணிப்புத் திறன்களை உள்ளடக்குகின்ற> சூழ்ச்சித்திறத்துடனான தரவு கையாளுகையைத் தடுப்பதற்கு ஒரு வலுவான தரவு முகாமை முறைமையொன்றை நடைமுறைப்படுத்துதல்.
கணக்காய்வுகளுக்கு> விசேடமாக SAP போன்ற முக்கிய முறைமைகளுக்கு நிறுவப்பட்ட கால அட்டவணையொன்று உள்ளவிடத்து கிரமமான கணக்காய்வுகள் மற்றும் இணங்கியொழுகுகை செவ்வைபார்த்தல்
இணைப்புகள்
இணைப்புகள்
https://economynext.com/kpmg-audit-of-ceylon-
petroleum-storage-terminals-finds-data-
deleted-stock-losses-151071/
https://english.newsfirst.lk/2024/02/15/million
s-of-fuel-sales-records-deleted-in-sri-lanka
https://www.dailynews.lk/2024/02/19/featured
/404804/deleting-data-the-latest-game/
https://ceylontoday.lk/2024/02/16/probe-reveals-
major-fuel-scam-at-cpstl/